நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி பெரம்பூர் தொகுதி வாக்காளர் எஸ்.தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தொடர்ந்தனர்.

அதில், விஜய் தமது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அசையா சொத்துகள் தொடர்பான விவரங்களை முழுமையாகத் தெரிவிக்கவில்லை; சில சொத்துகள் தொடர்பாகத் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார் என்று குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனிடையே இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி
முதல்வர் விஜய் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தமக்கு எதிராக தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதரமாற்றவை. எந்த வித ஆதாரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகையால் தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று தனது வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு அடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், பெரம்பூர் தொகுதி தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய முதல்வர் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Source: Read Full Article