அக்டோபர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதை இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான தீப்தி சர்மா வென்றுள்ளார்.

இரண்டாவது முறையாக ஐசிசி விருதை வென்றுள்ள தீப்தி சர்மா, சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.இதற்குமுன்னதாக கடந்த 2023-ஆம் ஆண்டு தீப்தி சர்மா ஐசிசி விருதை வென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.இவ்விருதுக்கு மொத்தமாக மூவர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் வங்கதேசத்தின் ஷோபனா மோஸ்தரி மற்றும் ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட் ஆகியோரை பின்னுக்கு தள்ளி தீப்தி சர்மா ஐசிசி விருதை வென்றுள்ளார்.

பேட்டிங், பௌலிங் இரண்டிலும் அசத்திய தீப்தி!

ஜிம்பாப்வேக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தனது திறமையை வெளிப்படுத்திய தீப்தி சர்மா, தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்ற பெரும் பங்காற்றினார். ஒரே ஒரு போட்டியில் மட்டுமே பேட்டிங் செய்த தீப்தி, அதில் 106 ரன்களை விளாசி அசத்தினார். மேலும் ஒரு நாள் போட்டித்தொடர் மற்றும் டி-20 தொடரிலும் பந்துவீச்சில் குறைவான ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த அவர் ஜிம்பாப்வே பேட்ஸ்மென்களின் விக்கெட்டுக்களை மளமளவென சரித்தார்.

இதேபோல், அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை தென் ஆப்பிரிக்காவின் மார்கோ யான்சென் வென்றுள்ளார்.

Source: Read Full Article