"எங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” - காதலன் சொன்ன ஒற்றை வார்த்தையால் நடந்த பயங்கரம்

"எங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” - காதலன் சொன்ன ஒற்றை வார்த்தையால் நடந்த பயங்கரம்
News Image

"3 - ஆண்டு காதல்"

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி முத்துக்குமாரின் மகன் வருண் பாலாஜி ( வயது 33 ). இவர் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 9 வது மாடியில் வசித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த BE பட்டதாரி, பர்வீன் ( வயது 24 ) என்ற இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். பர்வீன் கல்லூரி முடித்து சென்னைக்கு வேலை தேடி வந்த நிலையில் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். வருண் பாலாஜி , பர்வீன் இருவரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

"காதலியுடன் பேச மறுத்த காதலன்"

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வருண் பாலாஜி , காதலி பர்வீனுடன் பேசுவதை குறைத்ததாக கூறப்படுகிறது. பலமுறை தொடர்பு கொண்டும் அழைப்பை மறுத்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து காதலன் வருண் பாலாஜி வீட்டிற்கு சென்ற பர்வீன் "என்னிடம் ஏன் சரிவர பேசுவதில்லை" என்றும் "எனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள்… நீ வீட்டில் வந்து பேசு" என்றும் கூறியதாக கூறப்படுகிறது.

அதற்கு காதலன் வருண் பாலாஜி "நீ முஸ்லீம்.. உன்னை எங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்" என்று கூறி "திருமணம் செய்து கொள்வது கஷ்டம்" என்று மறுத்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே சிறிது நேரம் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. கோபத்தின் உச்சிக்கு சென்ற பர்வீன் , திடீரென காதலன் வீட்டில் இருந்த சேரை வெளியில் எடுத்து வந்து , அதன் மீது ஏறி 9 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

"காதலனுடன் விசாரணை"

இளம்பெண் ஒருவர் 9 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக குடியிருப்பில் வசிப்பவர்கள் அருகில் உள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம் பெண் பர்வீன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காதலன் வருண் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் இளம் பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாக இருந்ததாக காதலன் வருண் பாலாஜியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சென்னைக்கு வேலை தேடி வந்த 24 வயதான BE பட்டதாரி இளம்பெண் காதலனுடன் ஏற்பட்ட சண்டையால் 9 வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks