Yorkshire Wildlife Park: புலி வாய்க்குள் சிக்கிய இளைஞர்.. அநியாயமாக பறிபோன உயிர்.. Zoo-ல் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Yorkshire Wildlife Park: புலி வாய்க்குள் சிக்கிய இளைஞர்.. அநியாயமாக பறிபோன உயிர்.. Zoo-ல் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
News Image

இங்கிலாந்து வனவிலங்குப் பூங்காவில் புலி அடைக்கப்பட்ட இடத்திற்குள் நுழைந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் வடக்கு இங்கிலாந்தில் டான்காஸ்டர் நகருக்கு அருகிலுள்ள யார்க்ஷயர் வனவிலங்குப் பூங்காவில் நடைபெற்றுள்ளது. அங்கு நேற்று (அக்டோபர் 10) மதியம் சுமார் 1:35 மணியளவில் புலிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதியில் இளைஞர் ஒருவர் திடீரென உள்ளே புகுந்தார். விடுமுறை தினம் என்பதால் அந்த வனவிலங்கு பூங்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அவர்கள் கூண்டிற்கு வெளியே இருந்து புலியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சட்டென்று இளைஞர் செய்த செயலைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து பூங்கா நிர்வாக அதிகாரிகளும், பாதுகாப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகளும் அவசர மருத்துவப் பணியாளர்களும் அங்கு விரைந்த நிலையில், அதற்குள் அந்த இளைஞரை புலி ஒன்று தாக்க தொடங்கியது. இதனை சுற்றியிருந்த மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். ஆரம்பத்தில் புலியின் செயல் சற்று வேடிக்கையாக இருந்ததால் அந்த இளைஞரிடம் விளையாடுவதாக பலரும் நினைத்தனர். ஆனால் அந்த இளைஞர் வலியில் கத்த தொடங்கியதும் தான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த மக்கள் அவரை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர்.

A tiger doing what a tiger does best. man has sadly died after jumping into a tiger enclosure at Yorkshire Wildlife Park. 💔 #YorkshireWildlifePark #TigerAttack #UKNews #Wildlife #AnimalRights https://t.co/J4hTE3eSR0
— Hobson D (@hobson9000) October 10, 2026

எனினும் புலியிடம் இருந்து அந்த நபரை மீட்பதற்குள் அவர் கொடூரமாக தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் புலிக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், அது அடைக்கப்பட்ட இடத்திற்குள்ளேயே இருந்தது என்றும் தெற்கு யார்க்ஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த சம்பவத்தால் வன விலங்கு பூங்காவில் இருந்த மற்ற மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பூங்கா சீல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து அந்த இளைஞர் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியிலும், மீளாத்துயரிலும் இருக்கும் அவர்களுக்கு ஆறுதலாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளது. மேலும் புலி அந்த இளைஞரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதை நாங்கள் அறிந்துள்ளோம். மனதை வருத்தப்பட வைக்கும் அந்த வீடியோவை பொதுமக்கள் பகிர வேண்டாம் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சோக சம்பவம் காரணமாக வனவிலங்கு பூங்காவுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அந்த இளைஞர் எப்படி புலிகள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குள் நுழைந்தார், உயிரை பணயம் வைக்கும் அளவுக்கு அவருக்கு எதுவும் பிரச்னை உள்ளதா என்ற கோணத்தில் பூங்கா சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் பார்வையாளர்கள், ஊழியர்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பும் நல்வாழ்வும் எங்களது தலையாய முன்னுரிமை என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

யார்க்ஷயர் வனவிலங்குப் பூங்கா 2009ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் சைபீரியப் புலிகள் என்று அழைக்கப்படும் அழிவின் விளிம்பில் உள்ள அமூர் புலிகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 2 ஏக்கர் காப்பகம் 2011ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. புலிகள் வனப்பகுதி மற்றும் புல்வெளிகளில் சுற்றித் திரிவதையும், செயற்கை நீர்வீழ்ச்சியில் விளையாடுவதையும் பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் இந்த வன விலங்கு பூங்கா இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks