Weather Update: அடுத்த 3 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..! சூறைக்காற்றுடன் கனமழை பொளக்கும் - வானிலை அறிக்கை

Weather Update: அடுத்த 3 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..! சூறைக்காற்றுடன் கனமழை பொளக்கும் - வானிலை அறிக்கை
News Image

TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை மற்றும் சூறைகாற்றுடன் வடகிழக்கு பருவமழையின் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 நாட்கள் - சென்னைக்கு எச்சரிக்கை

கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. அதன் பிறகு சில தினங்கள் சென்னையில் பெரிய அளவில் மழை இல்லாத நிலையில், நேற்று மாலை தொடங்கி தற்போது வரை விடிய விடிய மழை பெய்து வருகிறது. ஆனால், இதைகாட்டிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னையில் கனமழை கொட்டி தீர்க்கும் என பிரதீப் ஜான் மற்றும் ஹேமச்சந்தர் போன்ற தனியார் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள்

ஹேமச்சந்தர் இன்று காலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “குமரிக் கடல் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நன்கு வலுப்பெற்று வருகிறது. கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாப் பகுதிகளில் மற்றொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதனால் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைய உள்ளது. குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் உள்ள ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவாக வலுப்பெற்று வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் நன்கு வலுப்பெற்ற தாழ்வழுத்தப் பகுதியாக மாற வாய்ப்புள்ளது. இன்று கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாப் பகுதிகளில் மற்றொரு தாழ்வழுத்தப் பகுதி உருவாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: TN Weather News: விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை

கனமழையுடன் சூறைக்காற்று

குமரிக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால், நேற்று இரவு தென் தமிழகம், உள் பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பரவலாகக் கனமழை பெய்தது. தற்போது, ​​வட கடலோர தமிழகத்திற்கு அப்பால் மேகங்கள் தீவிரமாக உள்ளன. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதால், இன்று முதல் அடுத்த 3 நாட்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இது இழுவிசை விளைவு குவிதல், இரு அமைப்புகளுக்கும் இடையேயான ஆற்றல் மாற்றம் மற்றும் பலத்த காற்று குவிதல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிட்டபடி, குமரிக் கடல் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் அமைப்புக்கு கோள் அலை ஆதரவு இன்னும் காணப்படுகிறது. எனவே, அடுத்த 72 மணி நேரத்திற்கு இந்த அமைப்பை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். பள்ளிக்குழந்தைகளே, சென்னை முதல் கடலூர் வரையிலான கடலோரப் பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று உங்களில் எத்தனை பேருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று பார்ப்போம்" என ஹேமசந்தர் எச்சரித்துள்ளார்.

பிரதீப் ஜான் சொல்வது என்ன?

மற்றொரு தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல மணி நேரங்களுக்குப் பிறகு, தென் சென்னையிலிருந்து மேகங்கள் மெதுவாக சென்னைக்குள் நகர்ந்து வருகின்றன. சென்னையின் கடலோரப் பகுதிகளில் மழை தொடங்கி, நகரின் பெரும்பாலான பகுதிகளில் பெய்து வருகிறது. சூரியன் வெளிவரத் தொடங்கும் போது இந்த மழை பலவீனமடையும். சீரான லேசான / தூறல் போன்ற மழை தொடரும். இன்று சென்னைக்கு ஒரு பெரிய நாள் அல்ல. 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகள் சென்னைக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும்” என எச்சரித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks