VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!

VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
News Image

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்ததை அடுத்து தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு மிகவும் பிரபலமானார். ஒரு மாதமாக நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வி.எஸ்.பாபு பங்கேற்றிருந்தார். இந்நிலையில் கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு கடந்த 9ம் தேதி திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து செயற்கை சுவாச கருவி உதவியுடன் வி.எஸ்.பாபுக்கு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 23ம் தேதி முதல்வர் விஜய் மருத்துவமனைக்கு சென்று வி.எஸ்.பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து அவ்வப்போது பல்வேறு வதந்திகள் வெளியாகின. இதன் காரணமாக அவ்வப்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது.

இதையும் படிங்க: தவெக கூட்டணியில் பாமக! அமைச்சரவையில் செளமியா அன்புமணி..? தமிழக அரசியலில் புதிய பரபரப்பு!

டிரக்கியாஸ் சிகிச்சையா?

ஆனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வி.எஸ்.பாபு  உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கைகள் வெளியாகததால் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் மீண்டும் பரவி வந்தன. அதாவது வி.எஸ்.பாபுக்கு வாய் அல்லது மூக்கு வழியாக மூச்சுவிட சிரமமாக இருப்பதால் கழுத்தின் முன்பகுதியில் துளையிட்டு குழாய் மூலம் நேரடியாக  நுரையீரலுக்கு  காற்றைச் செலுத்தும் டிரக்கியாஸ் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் இதனை குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்தனர்.  இந்நிலையில் வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார்.

வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் அருண்ராஜ்

அதாவது நீண்ட காலமாக சிகிச்சையில் இருக்கும் தவெக எம்எல்ஏவான வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. தற்போது உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியிடச் சொல்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks