Voter List 2027: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு! நவம்பர் 12 முதல் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம் இதோ!

Voter List 2027: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு! நவம்பர் 12 முதல் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம் இதோ!
News Image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் 2027 ஜனவரி 4-ஆம் தேதி வெளியிடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள நவம்பர் 12-ஆம் தேதி முதல் டிசம்பர் 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரிலும் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் அவர்களின் அறிவுரையின் பேரிலும், 01.01.2027-யை தகுதி நாளாக கொண்டு சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் 2027-ன் முன் நடவடிக்கைகளில் ஒன்றாக விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரிவு மற்றும் பகுதிகளை மறுசீரமைத்தல் மற்றும் வாக்குச்சாவடிகளின் பகுதி மற்றும் பகுதி எல்லைகளை உத்தேசமாக ஓரளவு மறு சீரமைத்து வாக்குச்சாவடி பட்டியல் குறித்து நவம்பர் 02, 2026 - க்குள் ஒப்புதல் பெறுதல் நடைபெறவுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 12, 2026 - ஆம் தேதி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில் வெளியிடப்பட உள்ளது.

பொது மக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சரியான முறையில் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து மேற்குறிப்பிடப்பட்ட அலுவலகங்களை நாடியோ அல்லது தங்களது பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாகவோ தெரிந்துகொள்ளலாம். தொடர்ந்து, ஏற்றரைகள் மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 12, 2026-ஆம் தேதிமுதல் டிசம்பர் 11, 2026-ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ள நிலையில் அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஏற்றரைகள் மற்றும் மறுப்புரைகள் மீதான தீர்வு வழங்கிடும் காலக்கெடு டிசம்பர் 28, 2026 ஆகும். இறுதி வாக்காளர் பட்டியல் 2027 ஜனவரி 4-ஆம் தேதி வெளியிடப்படும்.

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2027 பணியின் போது கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் அளிக்க அனுமதிக்கப்பட்ட நவம்பர் 12, 2026-ஆம் தேதி முதல் டிசம்பர் 11, 2026-ஆம் தேதி வரை உள்ள காலத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பவர்கள் படிவம் 6-னையும், அயல்நாடு வாழ் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமெனில் படிவம் 6A-னையும், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர்கள் படிவம்-6B-னையும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் இறந்திருப்பின் அல்லது நிரந்தரமாக குடிபெயர்ந்திருப்பின் அப்பெயர்களை நீக்கம் செய்திட படிவம் 7-னையும் மற்றும் வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே இடம் பெற்றுள்ள பதிவுகளில் பெயர், வயது, உறவுமுறை, முகவரி உள்ளிட்ட திருத்தங்கள் ஏதேனும் மேற்கொள்ளவோ அல்லது முகவரி/ குடி பெயர்ந்தவர்கள் அது குறித்த விவரத்தினைப் பதிவு செய்ய படிவம் 8-னையும், பூர்த்தி செய்து அலுவலக வேலை நாட்களில் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலகங்களில் நேரில் அளிக்கலாம் அல்லது இணைய வழி மூலமாக www.voters.eci.gov.in என்ற முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், சிறப்பு முகாம் நடைபெறவுள்ள நாட்களில் அந்தந்த வாக்குச் சாவடிகள் அமையப்பெற்ற வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி மைய அலுவலர்களிடம் அளிக்கலாம். அலுவலக வேலை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் அமைந்துள்ள நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடம் அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் போது, பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முகவரிச் சான்றாக நீர், மின்சாரம், எரிவாயு இணைப்பு, ஆதார் அடையாள அட்டை, வங்கி/ அஞ்சலகக் கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட், விவசாய அடையாள அட்டை, வாடகைக் குத்தகைப் பத்திரம், விடுவிற்பனைப் பத்திரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஆதாரமாக அளிக்கலாம்.

மேலும், வயதுக்குச் சான்றாக சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களின் நகலை அளிக்கலாம். இதில் உள்ளாட்சி அமைப்பு, நகராட்சி அதிகாரி, பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் வழங்கிய பிறப்புச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ, மாநிலக் கல்வி வாரியங்களால் வழங்கப்பட்ட 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு மதிப்பெண்/ மாற்றுச் சான்றிதழ்கள், ஆகியவற்றை வழங்கலாம்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் குறித்த சந்தேகங்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணிமுதல் மாலை 5.45 வரை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்ற விவரமும் தெரிவிக்கப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks