வெங்காயம் தக்காளி சமையலில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. காய்கறிகள் குறைவாக வாங்கி சென்றாலும் பை நிறைய தக்காளி, வெங்காயம் வாங்கி செல்கின்றனர். அதற்கான காரணம் சாம்பார் முதல் பிரியாணி வரை அனைத்திற்கும் வெங்காயம், தக்காளி தேவைப்படுகிறது. இவைகள் விளைச்சல் பருவமழை மற்றும் வானிலை மாற்றங்களைப் பொறுத்து விலை அமைகிறது.

கோயம்பேடு சந்தை

இந்நிலையில் ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள் மூட்டை மூட்டையாக லாரிகளில் வருகின்றன. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் வெங்காயம், தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: School Leave: வெளுத்து வாங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை? இதோ லிஸ்ட்!

தக்காளி, வெங்காயம் விலை

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் இன்றைய(26-10-2026) காய்கறி விலை என்ன என்பதை பார்ப்போம். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 73 முதல் 86 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 61 முதல் 72 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 41 முதல் 48 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 61 முதல் 72 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 46 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 32 முதல் 38 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 21 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 57 முதல் 68 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 52 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 36 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 46 முதல் 55 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

காய்கறிகளின் விலை நிலவரம்

அவரைக்காய் ஒரு கிலோ 50 முதல் 59 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 36 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 47 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 39 முதல் 46 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 56 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 66 முதல் 78 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 44 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 68 முதல் 81 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 146 முதல் 173 ரூபாய்க்கும், கோவைக்காய் ஒரு கிலோ 42 முதல் 49 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 97 முதல் 114 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 39 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 33 முதல் 39 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ. 52 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 முதல் 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Source: Read Full Article