உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் 43வது மாடியில் இருந்து ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களை உலுக்கியுள்ளது.

இந்த சம்பவம் நொய்டாவின் செக்டர் 94ல் உள்ள சூப்பர்நோவா சொசைட்டியில் நடைபெற்றுள்ளது. அங்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 43வது மாடியில் இருந்து நேற்று 35 வயது நபர் ஒருவர் திடீரென குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரைக் காப்பாற்றவும், சமாதனப்படுத்தி தற்கொலை முயற்சியை தடுக்கவும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. அந்த நபர் விழுந்த வேகம் மிகவும் கடுமையாக இருந்ததால் உடல் இரண்டு துண்டுகளாக சிதறியதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்த நபர் மனேசரைச் சேர்ந்த சம்பவ் ஜெயின் என தெரிய வந்தது. அவர் அந்த உயரமான கட்டிடத்தில் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குறுகிய காலத்திற்குத் தங்குவதற்கு கட்டப்பட்ட வீடு ஒன்றில் தங்கியிருந்ததும் கண்டறியப்பட்டது.

Software engineer Sambhav Jain.

Married in 2023 and had a premature child who faced frequent illnesses, leading to heavy medical expenses that forced him into deep debt.

The resulting financial strain triggered severe marital discord, culminating in a 2025 divorce with a total… pic.twitter.com/Dw62NyC1be

— THE SKIN DOCTOR (@theskindoctor13) October 4, 2026

சம்பவ் ஸ்பைரா கட்டிடத்தில் உள்ள ஒரு அறையில் ஒரு நாள் தங்குவதற்காகத் தனியாக வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அந்த அறையை ஆன்லைனில் முன்பதிவு செய்த பிறகு அக்டோபர் 2ம் தேதி பிற்பகல் சுமார் 3 மணியளவில் அங்கு வந்தடைந்துள்ளார். சம்பவ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் தங்கியிருந்த அறைக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பில் ஏசி பழுதுபார்க்கும் குழுவினர் வேலை செய்து கொண்டிருந்தனர். திடீரென பால்கனிக்கு வந்த அவர் அதன் மறுபக்கம் இறங்கி கைப்பிடியில் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த அக்குழுவினர் பதறிப்போயினர்.

உடனடியாக விரைந்து சென்று அவரைக் காப்பாற்ற முயன்றனர். பேச்சுவார்த்தையும் நடத்தினர். ஆனால் அவர்களின் முயற்சிகளையும் மீறி, சம்பவ் 43வது மாடியிலிருந்து குதித்தார்.

இதனிடையே சம்பவ் உடல் கைப்பற்றப்பட்டு, பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. காவல்துறை அதிகாரிகளும் தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்தை ஆய்வு செய்து தேவையான ஆதாரங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ் கடன் சுமையால் அவதிப்பட்டு வந்ததாகவும், நிதி நெருக்கடியில் இருந்ததால் 4 நாட்கள் முன்பு வீட்டிலிருந்து வெளியேறியதும் கண்டறியப்பட்டது. அவர் தற்கொலை செய்துக் கொண்ட தகவலை போலீசார் தெரிவித்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட விசாரணையானது தொடங்கியுள்ளது.

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)

Source: Read Full Article