TVK Vs EPS: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விஷவாசி என தமிழக வெற்றிக் கழகம் விமர்சித்துள்ளது.

”நினைத்து இருந்தால் ஃபோட்டோஷுட் எடுத்து இருப்போம்”

சென்னையில் பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர் சேர்ந்து தொடங்கி வைத்தனர். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு இருந்த ட்விட்டர் பதிவில், “தனது தலைமையிலான அதிமுக அரசில் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மத்திய அரசின் நிதி வராத சூழலிலும், மாநில அரசின் நிதியை ஒதுக்கீடு செய்து, பணிகளை துவக்கிய அரசு அஇஅதிமுக அரசு. மத்திய அரசு நிதி அளிக்காவிட்டாலும், மாநில அரசு தொடர்ந்து இந்த இந்த பழனிசாமி நினைத்திருந்தால் மெட்ரோ பாலத்தின் மீது கூலிங் கிளாஸ் போட்டு ஒரு போட்டோஷூட், Tunnel அடியில் Safety Helmet போட்டு ஒரு ரீல்ஸ் ஷூட்டிங் எடுத்திருக்க முடியும். ஆனால், அப்படிப்பட்ட ஏமாற்று அரசியலில் எனக்கு ஒருநாளும் உடன்பாடு இல்லை. நாம் பேசக் கூடாது. நம்முடைய செயல்கள் பேச வேண்டும்” என்பதை எப்போதும் நம்புபவன் நான்” என குறிப்பிட்டு இருந்தார். இதன் மூலம் முதலமைச்சர் விஜயை, எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக விமர்சிப்பதாகவே கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்: TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை

எடப்பாடி பழனிசாமிக்கு தவெக பதிலடி

இதுதொடர்பாக தவெக ஐடிவிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பதினைந்து படுதோல்விசாமி இன்று ஒரு பொறாமைப் புலம்பல் அறிக்கையை விட்டிருக்கிறார். ‘Tunnel அடியில் Safety Helmet போட்டு’ என்று கூறி உள்ளது எப்படி இருக்கிறது தெரியுமா?. தான் ஹெல்மெட் போடாமல் தடாலென தரையில் விழுந்து நீச்சல் அடித்துப் போய் முதலமைச்சர் பதவி பெற்றது குறித்து சொல்லி, தான் யாரென்ற உண்மையை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்ததுபோலவே இருக்கிறது. முதலமைச்சர் பதவியை யாரிடம் இருந்து பெற்றாரோ, அவரையே கட்சியை விட்டு நீக்கிய இவர்தான் ‘ஏமாற்று அரசியலில் எனக்கு ஒருநாளும் உடன்பாடு இல்லை' என்று தன் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்.

”மூக்குடைந்த எடப்பாடி பழனிசாமி”

இந்த விஷவாசியைப் பார்த்து மொத்த அரசியல் உலகமும் கைகளை மட்டுமல்ல கால்களையும் தட்டிச் சிரிக்கிறது. தாராபுரத்திலும் மதுராந்தகத்திலும் தன் மூர்க்கத்தனத்தால் மூக்கை உடைத்துக்கொண்டதால், தன் கட்சித் தொண்டர்களாலேயே தனித்துவிடப்பட்டதைத் தாங்கமுடியாமல் தத்துபித்து என்று உளறி இருக்கிறார். தொடர்ந்து இப்படியே நம் வெற்றித் தலைவரைப் பற்றி கிண்டல் கேலியாக தீயசக்தி தி.மு.க. குரலிலேயே பேசிக்கொண்டிருந்தால் ‘உள்ளதும் போச்சுடா’ என்ற நிலைமைக்கு ஆளாவதைத் தவிர வேறு வழியில்லை என்று இடர்ப்பாடியைச் சுற்றி உள்ள மிகமிகச் சிலரும் ஏகத்துக்கும் கொதிக்கின்றனர்” என தவெக ஐடிவிங் சாடியுள்ளது.

Source: Read Full Article