Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!

Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
News Image

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து, முதல்வராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அந்த கட்சியின் தேர்தல் வெற்றி மாநாடு விரைவில் நடைபெறவிருக்கிறது. அதற்கு திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மாநாட்டில் முதல்வர் விஜய் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

திருப்பம் தரும் திருச்சி

ஆட்சிக்கு வந்ததை கொண்டாடும் விதத்திலும், விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் ஐந்து தொகுதி இடைத் தேர்தலை மையப்படுத்தியும் முதல்வர் விஜய் தலைமையில் திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்த தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டின் மத்திய பகுதியான திருச்சியை சுற்றியே அடுத்த இடைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது. குறிப்பாக, முதல்வர் விஜய் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி, திருச்சி அருகே இருக்கக் கூடிய கரூர், புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை ஆகிய மூன்று தொகுதிகளும் அருகருகே இருப்பதால் இந்த இடத்தை தேர்வு செய்து மாநாடு நடத்துவது சரியானதாக இருக்கும் என முதல்வர் விஜய் முடிவெடுத்திருக்கிறார். அதே நேரத்தில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதி தேர்தல்களை திட்டமிட்டும் இந்த மாநாடு கட்டமைக்கப்படவிருக்கிறது.

வரலாற்று சிறப்பு மிக்க திருச்சி

அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக திராவிட கட்சிகளான திமுக, அதிமுக, மதிமுக ஆகியவற்றிற்கு திருச்சி முக்கிய திருப்பமாக அமைந்திருக்கிறது. அதனால் அவர்கள் தங்களது கட்சி மாநாட்டை திருச்சியில் நடத்துவதில் ஆர்வமாக இருப்பார்கள். குறிப்பாக, 1956ல் திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில்தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்த முடிவு எடுக்கப்பட்டது.  அதன் பின்னர் 1969ல் நடைபெற்ற திமுக மாநாட்டில்தான், மாநில தன்னாட்சி, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, சமூக நீதி உள்ளிட்ட திமுகவின் முக்கியமான 5 கொள்கைகள் முன் வைக்கப்பட்டு, அது இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. அதேபோல, எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய காலந்தோட்டு திருச்சியில் மாநாடுகளையும், கூட்டத்தையும் போடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அதே நேரத்தில் தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக திருச்சியை மாற்றுவதற்கான முன்னெடுப்புகளையும் எம்.ஜி.ஆர் செய்தார். அதேபோல, திமுகவில் இருந்து வெளியேறிய வைகோவும் திருச்சியிலேயே தன்னுடைய முதல் கூட்டத்தை கூட்டினார். அதுதான் பின்னர் மதிமுக உருவாக காரணமாக அமைந்தது.

விஜயின் திட்டம் என்ன ?

தேர்தலுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் 2024 அக்டோபர் 27ஆம் தேதி தன்னுடைய முதல் மாநாட்டை நடத்தினார் முதல்வர் விஜய். அது மிகப்பெரிய வெற்றி மாநாடாக மாறியது. அதில் கிட்டத்தட்ட 8 லட்சம் தொண்டர்கள் பங்கேற்றனர். அதேபோல, தன்னுடைய இரண்டாவது மாநாட்டை 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் நடத்திக் காட்டினார் விஜய். அந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி மாநாடாக ஆனது. இந்த இரண்டு மாநாடுகளுமே தமிழகத்தில் தவெக ஆட்சி அமைய முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளன.

2ஆவது தலைநகராகும் திருச்சி ?

இந்நிலையில் தேர்தல் வெற்றிக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் எதிர்வரும் இடைத் தேர்தல்களில் வெற்றி வாகை சூடும் முயற்சியாகவும் திருச்சி மாநாட்டை பார்க்கிறார் முதல்வர் விஜய். அதே நேரத்தில், அவரை தவெகவினர் நவீன எம்.ஜி.ஆர் என கொண்டாடிவருவதால், நடைபெறவுள்ள மாநாட்டில் திருச்சியை தமிழ்நாட்டின் 2ஆம் தலைநகராக அறிவிக்கவும் முதல்வர் விஜய் ஆலோசித்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks