TN Weather News: விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை

TN Weather News: விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
News Image

Tamil Nadu Weather Update (23-10-2026): தமிழ்நாட்டில் நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை வரை தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், “ பல மணிநேரங்களுக்குப் பிறகு, தெற்குச் சென்னையிலிருந்து மேகங்கள் மெல்ல சென்னை நகருக்குள் நகர்ந்து வருகின்றன. சென்னையின் கடலோரப் பகுதிகளில் மழை தொடங்கத் தொடங்கி, நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கும் பரவும். இன்று சென்னைக்கு மிக முக்கியமான நாள் அல்ல; 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகள் சென்னைக்கு மிகவும் சாதகமான நாட்களாக இருக்கும். தமிழகத்தின் உட்புறப் பகுதிகள் - டெல்டா மற்றும் தெற்குத் தமிழகப் பகுதிகள், கடலூர் விருதுநகர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தென்காசி, திருப்பூர், அரியலூர், டெல்டா பகுதிகள், திருவாரூர், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் பரவலான மழை பெய்துள்ளது.” என விவரித்துள்ளார்.

இன்று மிக கன மழைக்கான எச்சரிக்கை:

இதனிடையே, வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவுகிறது. அதனால் இன்று கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

கன மழைக்கான எச்சரிக்கை:

மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம். மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர், சென்னை மற்றும் திருவள்ளூர்' மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை பகுதிகளுக்கான இன்றைய வானிலை

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

23-10-2026 முதல் 26-10-2026 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

23-10-2026: அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு - தென்மேற்கு- மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

23-10-2026 முதல் 26-10-2026 வரை: கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks