தமிழ்நாட்டில் பொதுவாக வடகிழக்கு பருவமழைக் காலத்தில் அதிகளவு மழை பொழிவது வழக்கம். குறிப்பாக, இந்த காலகட்டத்தில் சென்னை கடுமையான பாதிப்பை சமீபகாலமாக சந்தித்து வருகிறது.

பெருகிவரும் மக்கள் தொகை, கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறுவதற்கு போதிய அளவு வசதியின்மை என்று பல காரணங்கள் இதற்கு உள்ளது.

மழைக்காலங்களில் மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள் குறித்து கீழே காணலாம்.

1. மழைக்காலம் என்றாலே வெளியில் செல்லும்போது கண்டிப்பாக குடையுடன் செல்வது நல்லது. எப்போது மழை பெய்யும், பெய்யாது என்று கணிப்பது மிகவும் சவாலாக இருக்கும்.

2. மழைக்காலம் தொடர்பான வானிலை ஆய்வு மைய அறிவிப்புகளை தொலைக்காட்சி, நாளிதழ், இணையதளங்கள் வாயிலாக தெரிந்து கொள்வது நல்லது. புயல் , அதிகனமழைக்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியிடப்படும்போது அதை தெரிந்து கொள்வது நல்லது ஆகும்.

3. மழைக்காலங்களில் பொதுவாக மின்தடை அடிக்கடி ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்கு காரணம் தேவையற்ற விபத்தை தவிர்க்க வேண்டும் என்ற முன்னெச்சரிக்கையே ஆகும். இதனால், வீடுகளில் எப்போதும் டார்ச் லைட், மெழுகுவர்த்தி, தீப்பெட்டிகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

4. மழைக்காலங்களில் மிகப்பெரிய சவால்களில் ஒன்று இரு சக்கர வாகனங்களை பராமரிப்பது ஆகும். மழையிலே நனைந்தால் வாகனம் பழுதடைவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால், இரு சக்கர வாகனங்களை முடிந்தவரை மழையில் நனையாத இடத்தில் நிறுத்தி வைப்பது நல்லது. இல்லாவிட்டால் கவர்கள் இட்டு மூடி வைக்க வேண்டும். முடிந்த வரை தண்ணீர் தேங்காத மேடான இடத்தில் இரு சக்கர வாகனம், கார்களை நிறுத்துவது நல்லது ஆகும்.

5. மழைக்காலங்களில் புயல் காற்றுடன் கனமழை பெய்யும்போது மின்தடை நீண்ட நேரம் இருக்கும். இதனால், செல்போன்களை முழு அளவில் சார்ஜ் செய்து வைத்துக்கொள்வது நல்லது ஆகும்.

6. புயல், அதிகனமழை போன்ற அறிவிப்புகள் வானிலை மையத்தால் வெளியிடப்பட்டால் அதற்கு முன்பாகவே பால், முட்டை, காய்கறிகள் போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது ஆகும். இல்லாவிட்டால் சிரமத்தைச் சந்திக்க நேரிடும்.

7. மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் சூழும் பகுதியில் வசிப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்கள்தான் அதிகளவு சிரமங்களை எதிர்கொள்வார்கள். இந்த பகுதியில் வசிப்பவர்கள் வெள்ளம் தங்கள் வீடுகளை சூழும் என்று கருதினால் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வது நல்லது ஆகும்.

8. மழைக்காலங்களில் மற்றொரு பெரிய சவாலாக இருப்பது இணைய சேவை. இதனால், ஏடிஎம் மற்றும் போன்பே, கூகுள்பே போன்றவற்றை மட்டும் நம்பியில்லாமல் கையில் பணமாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது ஆகும்.

9. மழைக்காலங்களில் எப்போது உணவு மிகவும் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சமைப்பதற்கு எளிதாகவும், அதேசமயம் செரிமானம் ஆவதற்கும் உடல்நலத்திற்கும் தீங்கு இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது ஆகும்.

10. மழைக்காலங்களில் வீடுகளில் குடிநீர் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் நீர் போதுமான அளவு அனைத்து பாத்திரங்களிலும் இருக்குமாறு கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மின்தடை, மோட்டார் இயங்காமல் போதல் போன்ற காரணங்களால் சிரமத்தை மேற்கொள்ள நேரிடும்.

11. மழைக்காலங்களில் வீடுகளில் தண்ணீரை சுடவைத்து குடிப்பது மிகவும் நல்லது ஆகும். மேலும், வீட்டின் சுவர் அல்லது கூரை மீது சாயும் தருவாயில் உள்ள மரங்களின் கிளைகளை முன்கூட்டியே வெட்டி அகற்றிவிடுவது நல்லது ஆகும்.

12. மழை மற்றும் குளிர்காலங்களில் வாகனங்களின் இடுக்குகள், காலணிகளின் இடுக்குகளில் பாம்பு, பூரான் போன்ற உயிரினங்கள் ஒதுங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால், மழைக்காலங்களில் காலணிகளை அணியும் முன்னர் அதை உதறிவிட்டு கவனமாக அணிய வேண்டும்.

13. மழைக்காலங்களில் அடிக்கடி உடல்நலக்கோளாறு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஏதேனும் சளி, காய்ச்சல் அறிகுறி தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது ஆகும்.

Source: Read Full Article