TN Govt: சிபாரிசுன்னு வந்துடாதிங்க..! அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை, மீறினால் ஆப்பு தான் - முழு விவரம்

TN Govt: சிபாரிசுன்னு வந்துடாதிங்க..! அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை, மீறினால் ஆப்பு தான் - முழு விவரம்
News Image

TN Govt Warning To Employees: அரசு ஊழியர்களை எச்சரித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககம், கூடுதல் இயக்குநர் ராஜசேகர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

அரசுத்துறையில் பணி உயர்வு, பணியிட மாற்றம் உள்ளிட்டவற்றிற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் போன்றோரின் சிபாரிசு கடிதங்களை பயன்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறையை நிலைநாட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககம்,கூடுதல் இயக்குநர் ராஜசேகர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை மூலமான,  தமிழக அரசின் இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பிரச்னை என்ன?

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை கீழ் இயங்கும் சில அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தங்களின் பணியிட மாறுதல், பதவி உயர்வு போன்ற தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக, உரிய நிர்வாக வழியை (Proper Official Channel) பின்பற்றாமல், நேரடியாக அமைச்சர்கள், MLA-க்கள், முதலமைச்சரின் முகவரி பிரிவு (CM Cell) ஆகியோரிடம் மனு கொடுத்து வருகின்றனர். இது அரசு நிர்வாக மரபுக்கு எதிரானது ஆகும்.

அரசின் அதிரடி உத்தரவு - விதி 18, 20 என்ன சொல்கிறது?

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தை விதிகள், 1973 விதி 18-ன் படி, எந்தவொரு அரசுப் பணியாளரும், தங்களின் சேவை தொடர்பான விஷயங்களில் சாதகமான ஆணைகளைப் பெறுவதற்காகவோ அல்லது சலுகைகளைப் பெறுவதற்காகவோ, எவ்வித வெளிச் செல்வாக்கையோ (outside influence), அரசியல் செல்வாக்கையோ கொண்டுவரவோ அல்லது கொண்டுவர முயற்சிக்கவோ கூடாது. என்பது விதியாகும். மறுபுறம் விதி 20-ன் படி, தங்கள் குறைகளை மேலதிகாரிகளிடம் தெரிவிக்கும்போது, உரிய அதிகாரப்பூர்வ வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அரசின் நற்பெயருக்கு, கண்ணியத்துக்கு பாதகமான எந்த அறிக்கையையும் வழங்கக் கூடாது.

இதையும் படியுங்கள்: Ind US: ஸ்கெட்ச்சு போட்டு மோடியை மிரட்டிப் பார்க்கும் அமெரிக்கா? பூரியை கொண்டு ஆயிலை விற்க வலைவிரிப்பு?

விதிகளை மீறினால் என்ன நடக்கும்?

1.  இனி எந்த கோரிக்கையாக இருந்தாலும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள நேர்மறையான  வழியில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
2.  துறைத் தலைவரின் முன் அனுமதியின்றி நேரடியாக அமைச்சர், MLA, CM Cell-க்கு மனு அனுப்புவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
3.  இதை மீறினால், தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் (TNCS D&A Rules) கீழ் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது

சிபாரிசு எனப்படும் பரிந்துரை கலாச்சாரத்தை ஒழித்து, தகுதி அடிப்படையில் நிர்வாகத்தை நடத்த அரசு எடுத்துள்ள இந்த துணிச்சலான நடவடிக்கை, நேர்மையான அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks