TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?

TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
News Image

TN Govt New Secretariat: CMDA நிர்வாகம் அளித்த அனுமதியின் காரணமாக, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் திட்டம் வேகமெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய தலைமை செயலத்திற்கு அரசு திட்டம்:

சென்னை ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமை செயலகத்தில் கடுமையான இடநெருக்கடி நிலவி வருகிறது. இதனால், எதிர்கால தேவைகளையும் கருத்தில் கொண்டு ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள 21.37 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் புதிய தலைமை செயலகத்தை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்க அரசாணையும் வெளியிடப்பட்டது. இதற்கு மீனவர்கள் சமூகம், இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

பட்டினப்பாக்கம் திட்டம் ரத்தா?

புதிய தலைமை செயலகம் தொடர்பாக பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இதுதொடர்பான இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. புதிய தலைமை செயலகமா? மீனவர்களின் வாழ்வாதாரமா? என கேட்டால் முதலமைச்சர் விஜய் மீனவர்கள் பக்கம் தான் நிற்பார் என உறுதியளித்து இருந்தார். அதன் பிறகு இந்த திட்டத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், பட்டினப்பாக்கம் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. வேறு சில இடங்களை அரசு ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான், பட்டினப்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்ட நிலத்தை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அந்த பகுதியில் புதிய தலைமை செயலகத்தை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசு வேகப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்

வணிக பயன்பாடு வகைப்பாட்டிற்கு ஒப்புதல்

பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான 21.37 ஏக்கர் நிலத்தில் தான், புதிய செயலகம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த இடம் குடியிருப்பு, நிறுவன பயன்பாடு மற்றும் பொதுபயன்பாடு வகைபாட்டில் உள்ளதால் அடுத்தடுத்த அனுமதிகள் பெறுவதும் எளிது என கூறப்பட்டது. இந்நிலையில் தான், அங்கு ஒரு வணிக வளாகம் கட்டுவதற்காக அந்த நிலத்தை வணிகப் பயன்பாட்டு மண்டலமாக மறுவகைப்படுத்தக் கோரி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் விண்ணப்பித்து இருந்தது. அதனை பரிசீலித்த பின்னர் அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தலைமை செயலக கட்டிடத்திற்காகவே அந்த நிலம், வணிக பயன்பாட்டிற்காக வகைப்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், மீனவர்களின் எதிர்ப்பு காரணமாக அந்த திட்டம் கைவிடப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அரங்கேறியுள்ள நில வகைப்பாடு அரசு என்ன மாதிரியான திட்டத்தில் இருக்கிறது? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அதேநேரம், இந்த விவகாரத்தில் அரசு தரப்பு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks