TN Govt Onion: நியாய விலை கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்கு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நியாய விலை கடைகளில் வெங்காயம்:

தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை அண்மைக்காலமாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு சந்தை குறுக்கீட்டு நடவடிக்கையாக வெங்காயத்தைக் கொள்முதல் செய்து, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.35-க்கே வெங்காயம்:

முதற்கட்டமாக இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் (NAFED) மூலமும் . இரண்டாவது கட்டமாக இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (NAFED) மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடமிருந்து (NCCF) வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மூன்றாம் கட்டமாக கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 8,914 நகர்ப்புற நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில், ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ வெங்காயம் ரூ.35/- என்ற விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

700 மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனை:

மேலும், பொதுமக்களின் தொடர்ச்சியான தேவை மற்றும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, மூன்றாம் கட்டமாக தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடமிருந்து (NCCF) 700 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, பல்வேறு போக்குவரத்து மூலமாக மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக்கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளுக்கு சென்று சேரும் வகையில் நடவடிக்கையின் தொடர்சியாக சென்னையில் 10.10.2026 அன்று முதல் சென்னையிலும், 11.10.2026 அன்று முதல் இதர மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்யப்படும். குடும்ப அட்டைதாரர்கள் வெங்காயத்தை பெற்று பயன்பெறலாம்.

இதையும் படியுங்கள்: CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்

மக்கள் சுமையை குறைக்க நடவடிக்கை:

இந்த நடவடிக்கையின் மூலம், வெங்காயத்தின் விலை உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, குறிப்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு வெங்காயம் நியாயமான விலையில் தொடர்ந்து கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது. அதன்படி, கூட்டுறவுத்துறையின் கீழ் மூலம் இயங்கும் நியாய விலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை பொதுமக்கள் 96005 61969 என்ற வாட்ஸ் அப் (WhatsApp) எண்ணிலும் தெரிவிக்கலாம்” என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடடு காய்கறி சந்தையில் பெரிய வெங்கயம் மொத்த விற்பனையில் கிலோ 59 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 110 ரூபாய்க்கும் விற்பனையாவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Source: Read Full Article