TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?

TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
News Image

தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பை கூடுதல் கவனித்து வந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

யார் இந்த அர்லேக்கர்?

கோவாவில் உள்ள பனாஜியில் விஸ்வநாத் அர்லேகர் - திலோத்தம்மா அர்லேகர் ஆகியோரின் மகனாக கடந்த 1954ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பிறந்தார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். தனது ஆரம்பக் கல்வியை கோவா மாநிலத்தின் வாஸ்கோடகாமாவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனத்தில் படித்தார். பின்னர் அதே பகுதியில் உள்ள எம்இஎஸ் கல்லூரியில் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். அவரது இளமைக் காலத்திலேயே சமூக மற்றும் அரசியல் ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.

இவரது தந்தை ஜனசங்கத்தின் கோவா மாநிலத் தலைவராக இருந்தவர். ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆர்எஸ்எஸ் உடன் ஆரம்பத்தில் இருந்தே தொடர்பு கொண்டிருந்திருக்கிறார். பின்னர் 1989ம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைந்தார். இந்தியாவில் எமர்ஜென்சி காலக்கட்டத்தில் தந்தையுடன் சிறைக்கு சென்றவர்.

பொறுப்பு ஆளுநர்

2002 முதல் 2007ம் ஆண்டு வரை கோவா சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். மேலும் 2003 முதல் 2007 வரை கோவா மாநில பாஜக தலைவராகவும் இருந்துள்ளார். அதேபோல 2012 முதல் 2017 வரை கோவா சபாநாயகராக பதவி வகித்திருக்கிறார். இமாச்சல பிரதேசம், பீகார் மாநிலங்களின் ஆளுநராகவும் பதவி வகித்திருக்கிறார். தொடர்ந்து கடந்த ஆண்டு கேரள மாநிலத்தின் 23வது ஆளுநராகப் பதவியேற்ற இவர் தற்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுராக இருந்து வந்தார்.

முழுநேர ஆளுநராக அர்லேகர் நியமனம்

இந்நிலையில் தமிழ்நாட்டின் முழு நேர ஆளுராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளம் ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் , ஒடிசா, கர்நாடகா, உத்தரகாண்ட் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks