Tasmac TN Govt: டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு..! 50 லட்சம் காப்பீடு - 22,877 பேருக்கு SBI சம்பள திட்டம் - அரசு அதிரடி

Tasmac TN Govt: டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு..! 50 லட்சம் காப்பீடு - 22,877 பேருக்கு SBI சம்பள திட்டம் - அரசு அதிரடி
News Image

Tasmac TN Govt: டாஸ்மாக் ஊழியர்களுக்கு மூன்று வகையிலான காப்பீடு திட்டத்தை, தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!

நீண்ட காலமாக டாஸ்மாக்கில் நிலவும் பல பிரச்னைகளுக்கு தீவு கண்டு, பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கும் நடவடிக்கயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக ஊதிய உயர்வு, ஊதிய முன்பணம், விடுமுறை, ஷிஃப் அடிப்படையில் பணி, மின்சார கட்டணம் மற்றும் கடை பராமரிப்பிற்கான செலவு ஆகியவற்றை அரசே ஏற்கும் என்பது போன்ற பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் டாஸ்மாக் ஒப்பந்த ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளது. SBI வங்கியுடன் இணைந்து CSP எனப்படும் கார்ப்ரேட் ஊதிய பேக்கேஜ் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்: TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி

கார்ப்ரேட் ஊதிய பேக்கேஜ்:

டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் பிறப்பித்த உத்தரவின்படி,  தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் 22,877 பேருக்கு இந்த பலன் கிடைக்கும். கடை கண்காணிப்பாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர் என மூன்று பிரிவினரும் இதில் அடங்குவர். பயனர்கள் SBI-யில் சம்பள கணக்கு வைத்திருப்பது கட்டாயம்.

திட்டத்தின் பலன்கள் என்ன?

விபத்தில் மரணம் நேர்ந்தால் Gold பிரிவுக்கு ரூ.50 லட்சம், Silver பிரிவுக்கு ரூ.30 லட்சம் வரையிலான காப்பீடு வழங்கப்படும்

நிரந்தர முழு ஊனம் மற்றும் பகுதி ஊனத்திற்கும் காப்பீடு

விபத்து மரணத்துடன் 10 வகையான கூடுதல் காப்பீடுகள் (Add-on Covers)

4. SBI வழங்கும் Debit Card-க்கும் தனி விபத்து காப்பீடு

யாருக்கு எந்த பிரிவு?

சம்பள அடிப்படையில் பிரிவு முடிவு செய்யப்படுகிறது. கண்காணிப்பாளர் (ரூ.28,750 சம்பளம்) மற்றும் விற்பனையாளருக்கு ரூ.26,340 சம்பளம் Gold பிரிவு காப்பீடுகள் வழங்கப்படும். உதவி கண்காணிப்பாளருக்கு (ரூ.24,928 சம்பளம்) சில்வர் பிரிவு காப்பீட்டு பலன்கள் கிடைக்கும்.

கையெழுத்தாக உள்ள புதிய ஒப்பந்தம்:

TASMAC தலைமை அலுவலகத்திற்கும் SBI வங்கிக்கும் இடையே விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாக உள்ளது. அதற்கு முன் அனைத்து மாவட்ட மேலாளர்களும் தங்கள் மாவட்ட ஊழியர்களின் பெயர், பதவி, சம்பள கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து http://tasmace2e.in என்ற போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும். தவறான தகவல் இருந்தால் உடனடியாக திருத்த வேண்டும். விவரங்களை பதிவேற்ற கடைசி நாள்: 15.10.2026. இந்த திட்டம் மூலம் ஒப்பந்த ஊழியர்களுக்கு பெரும் பாதுகாப்பு கிடைத்துள்ளதாக ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks