Tasmac Holiday Insurance: தேவர் குருபூஜை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு மதுரையில் உள்ள டாஸ்மாக்கிற்கு 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கிற்கு 3 நாட்கள் விடுமுறை:

தமிழ்நாட்டின் முக்கியமான நிகழ்வுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் தேவர் குருபூஜை குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. அந்த வகையில் நடப்பாண்டில் வரும் அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ள தேவர் குருபூஜையில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் அவர் முதல்முறையாக இந்த நிகழ்வில் பங்கேற்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஹெலிகாப்டர் மூலம் விஜய் பசும்பொன்னை சென்றடைவார் என கூறப்படும் நிலையில், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகளை கருத்தில் கொண்டு மதுரையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த நாட்களில் டாஸ்மாக் விடுமுறை..!

தேவர் ஜெயந்தி, மருது பாண்டியர் குருபூஜை ஆகியவற்றை ஒட்டி மதுரை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள், தனியார் பார்கள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் பசும்பொன் பகுதிக்கு வரவுள்ளதால், அசம்பாவித நிகழ்களை தடுக்கும் விதமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Weather Update: அடுத்த 3 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..! சூறைக்காற்றுடன் கனமழை பொளக்கும் - வானிலை அறிக்கை

ரூ.12 லட்சம் வரை மருத்துவ காப்பீடு

இதனிடையே, டாஸ்மாக் பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2026-ஐ டாஸ்மாக் மேலாண் இயக்குநர் கே.நந்தகுமார் அறிவித்துள்ளார். இது சேல்ஸ்மேன், சூப்பர்வைசர், மாவட்ட மேலாளர்கள் மற்றும் அவுட்சோர்சிங் பணியாளர்கள் அனைவருக்கும் பொருந்தும். பழைய திட்டத்தில் ரூ.10 லட்சமாக இருந்த காப்பீடு, இனி ரூ.12 லட்சமாக பயன்பட்டிற்கு வந்துள்ளது. அடிப்படை காப்பீடு ரூ.7.50 லட்சமாக இருக்க, Top-up IA உடன் சேர்த்து மொத்தம்: ரூ.12 லட்சம்

திட்டத்தின் முக்கிய பலன்கள்:

1. மருத்துவமனையில் சேரும்போதே ரூ.1 லட்சம் வரை முன்பணம் பயனரின் வங்கி கணக்குக்கு வரும்.
2. மாத சந்தா வெறும் ரூ.300 மட்டுமே
3. பணமில்லா சிகிச்சை (Cashless) வசதி உண்டு.
4. இந்த திட்டம் 01.10.2026 முதல் 30.09.2031 வரை - 6 வருடங்களுக்கு செல்லும். குடும்பத்துடன் சேர்த்து (Family Floater) பலன் பெறலாம்.

விண்ணப்பிக்க படிவம் 2-ஐ பூர்த்தி செய்து மாவட்ட மேலாளரிடம் கொடுக்க வேண்டும். அதற்கு 2 பேர் பிணை கையெழுத்து போட வேண்டும். மருத்துவ செலவு கோரிக்கையை டிஸ்சார்ஜ் ஆன 1 மாதத்துக்குள் கொடுக்க வேண்டும். தவறினால் மாதம் ரூ.5000 வீதம் 10 தவணையாக மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என டாஸ்மக் நிர்வாகம் அறிவித்துள்ளது. டாஸ்மாக் ஊழியர்களின் நலைனை பேணி காக்க பல்வேறு அதிரடி நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

Source: Read Full Article