Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம் உஷார்! 24 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னையில் எப்படி இருக்கும்?

Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம் உஷார்! 24 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னையில் எப்படி இருக்கும்?
News Image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பரவலாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை மாலை அல்லது இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்கிறது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

கனமழை எச்சரிக்கை

மேலும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: School Holiday: பள்ளி மாணவர்கள் மீண்டும் கொண்டாட்டம்! அக்டோபர் 22 விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களுக்கு?

எந்தெந்த மாவட்டம் ஹாட் ஸ்பாட்

இதனிடையே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை முதல் இரவு வரை மழையின் தீவிரம் அதிகரிக்கும். இது அப்படியே அதிகாலை வரை தொடரும். மேலும் டெல்டா மற்றும் கடலூர், விழுப்புரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய கடலோர பகுதிகளும் மழையின் ஹாட் ஸ்பாட்டில் இருக்கிறது. இங்கும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:  மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!

3 மணிநேரத்தில் 24 மாவட்டங்களில் மழை

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது இரவு 10 மணிவரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருச்சி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks