தமிழகத்தில் 2026-2026-ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் EMIS தளத்தில் மாணவர்களின் விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

10ம் வகுப்பு பள்ளி மாணவர்கள்

இதுதொடர்பாக தமிழக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: நடப்புக் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. எமிஸ் தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், கைபேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து திருத்தம் இருந்தால் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க: Prem Anand Sinha: புதிய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் நியமனம்.. யார் இந்த பிரேம் ஆனந்த் சின்ஹா?

தேர்வுத் துறை இயக்குநரகம்

மாணவர் விவரங்களைச் சரிபார்த்து, தேர்வுத் துறை இணையதளத்தில் அக்டோபர் 7-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதி இதற்கான அவகாசம் அக்டோபர் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பெயர்ப் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால் பணிகளை கவனமாக மேற்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Source: Read Full Article