SIR-க்கு எதிரான போராட்டம்..! களமிறங்கும் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் - எங்கு தெரியுமா?

SIR-க்கு எதிரான போராட்டம்..! களமிறங்கும் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் - எங்கு தெரியுமா?
News Image

Parakala Prabhakar: CJP நிறுவனர் அபிஜித் தீப்கே, நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோருடன் சேர்ந்து நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் பங்கேற்க உள்ளார்.

SIR போராட்டத்தில் பரகலா பிரபாகர்..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (SIR) தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக் கோரி அக்டோபர் 23 அன்று நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார். மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் பல்வேறு தரப்பினர்களின் பிரதிநிதித்துவ அமைப்புகளை உள்ளடக்கி, அக்டோபர் 14 அன்று உருவாக்கப்பட்ட 'SIR-க்கு எதிரான மக்கள்' என்ற கூட்டணியால் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் போராட்டம்..!

"ஜனநாயகத்தை மீட்டெடுப்பது மற்றும் நாடு முழுவதும் ஜந்தர் மந்தர்களை உருவாக்குவது" என்ற குறிக்கோளுடன், அக்டோபர் 23 அன்று மக்கள் பேரணி ஒன்றை இந்தக் கூட்டணி அறிவித்துள்ளது.  "ஒவ்வொரு கையிலும் மூவர்ணக் கொடி, ஒவ்வொரு தெருவிலும் ஜந்தர் மந்தர்" என்பது இதன் முழக்கமாகும். பரகலா பிரபாகர், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, நடிகர்-சமூக செயற்பாட்டாளர் பிரகாஷ் ராஜ், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா ஆகியோர் ஒன்றாக போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். விவசாயத் தலைவர் ராகேஷ் திகைத், எழுத்தாளர் துஷார் காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஐஷே கோஷ் ஆகியோரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்டத்தின் நோக்கம் என்ன?

காங்கிரஸ் உள்ளிட்ட INDI கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியிலிருந்து நீக்கி அவர் மீது வழக்குத் தொடர வேண்டும், சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் (SIR) செயல்முறையை ரத்து செய்ய வேண்டும் மற்றும் நீக்கப்பட்ட அனைத்து வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்பவை  இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாகும்.

SIR-ஐ சாடும் பரகலா பிரபாகர்..

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை "குடிமக்களின் ரத்தம் சிந்தாத அரசியல் இனப்படுகொலை" என்று பரகலா பிரபாகர் கடுமையாக விமர்சித்துள்ளார். ஜெர்மனி மற்றும் ருவாண்டா போன்ற நாடுகளில் இனம், மதம், மொழி அல்லது நிறம் உள்ளிட்ட காரணங்களுக்காக மக்கள் துன்புறுத்தப்பட்ட நிகழ்வுகளைப் போலல்லாமல், இந்தியாவில் நடந்த இந்த செயல்முறையானது, மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் நோக்கில் அவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து குறிவைத்து நீக்குவதை உள்ளடக்கியதாக அவர் குற்றம்சாட்டுகிறார். மேலும், ”SIR செயல்முறையானது பெருமளவிலான வாக்குரிமைப் பறிப்பிற்கு வழிவகுப்பதோடு, நாட்டில் வாக்குரிமையைத் தக்கவைத்துக் கொள்பவர்கள் மற்றும் அவ்வுரிமையை இழக்கிறவர்கள் என இரண்டு பிரிவுகளாகப் மக்களைப் பிரிப்பதாகவும்” பிரபாகர் சாடுகிறார்.

தொடர்ந்து, “வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்படும்போது மக்கள் குடிமக்களாகவே நீடிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படும்போது குடியுரிமையின் ஒரு முக்கிய அம்சத்தை இழக்கிறார்கள். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் ஒரு அடிப்படை மாற்றம் பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். வாக்காளர்களின் வாக்குரிமையை மீட்டெடுப்பதற்காக, பெயர்கள் நீக்கப்பட்ட வாக்காளர்களின் சங்கம் ஒன்று செயல்பட வேண்டும் என பரகலா பிரபாகர் அழைப்பு விடுத்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks