Singeetam Srinivasa Rao Passed Away: தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் படங்களை இயக்கியுள்ள சிங்கீதம் சீனிவாசராவ் வயது 94 ஆகும்.

இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் காலமானார்:

தமிழ் சினிமாவில் பழம்பெரும் இயக்குனர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாச ராவ் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 94 ஆகும். வயது முதிர்வு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் நீத்தார். அவரது மறைவு இந்தியத் திரையுலகிற்கே பேரிழப்பாக கருதப்படும் நிலையில், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பலரும் சிங்கீதம் சீனிவார ராவ் மறைவிற்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் டூப்பர் இயக்குனர்

1957ம் ஆண்டு முதல் மாயபஜார் உள்ளிட்ட திரைப்படங்களில் ஏராளமான திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய சிங்கிதம் சீனிவாசராவ்,1972ம் ஆண்டு முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 60 படங்களை இயக்கி தேசிய அளவில் கவனம் பெற்றார். 1988 ஆம் ஆண்டில் அவர் முதல் இந்திய மௌன திரைப்படமான புஸ்பக் என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தேசிய பொழுதுபோக்கு விருது பெற்றது. கர்நாடக அரசு திரைப்பட சிறந்த இயக்குநர் விருது இந்த திரைப்படத்திற்காக பெற்றார். தமிழில் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் போன்ற பல அதிரி புதிரி ஹிட் அடித்த படங்களை இயக்கியுள்ளார்.

Source: Read Full Article