தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10ம் வகுப்பு எழுதும் பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் , மாணவர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்தல், TML கட்டணம் செலுத்துதல் தொடர்பான வழிமுறைகள் வெளியாகியுள்ளன.

அரசு தேர்வுகள் இயக்ககம்

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகளில் அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும், செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 07 வரையிலான நாட்களில், EMIS வலைதளத்திற்கு சென்று EMIS -ல் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password-பயன்படுத்தி தங்களது பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களது மாணாக்கரின் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பிறந்த தேதி, புகைப்படம் (jpeg. jpg). பாலினம், இனவகைப்பாடு, மதம், மாணாக்கரின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), மாற்றுத் திறனாளி வகை மற்றும் சலுகைகள், கைபேசி எண்,மாணாக்கரின் வீட்டு முகவரி, பெற்றோரின் ஆண்டு வருமானம் ஆகிய விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து, திருத்தங்கள் இருப்பின் உடன் திருத்தத்தினை மேற்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டது. சில பள்ளிகள் மேற்காண் பணியினை நிறைவு செய்திடாத காரணத்தினால் அக்டோபர் 12ம் தேதி வரை கூடுதல் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, மார்ச் மற்றும் ஏப்ரல் 2027 பத்தாம் வகுப்பு பெயர்ப்பட்டியல் தயாரிப்பதற்கு அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் அக்டோபர் 14 (புதன்கிழமை) முதல் 31ம் தேதி (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் https://deptnschools.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று. கீழ்க்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி, மாணாக்கரது விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யவேண்டும்.

இதையும் படிங்க: School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!

பெயர்ப் பட்டியல் தயாரித்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல்

* பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்களது பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களது விவரங்களை பதிவு செய்ய https://dgeepp.tnschools.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள UDISE Code (User ID) மற்றும் Password-ஐ பயன்படுத்தி Log in செய்ய வேண்டும்.

* Log in செய்த பிறகு திரையில் தோன்றும் Data Pull Requestன்ற வாசகத்தை click செய்து, தங்களது பள்ளியில் பயிலும் ஒவ்வொரு பத்தாம் வகுப்பு மாணவர்களது விவரங்களை EMIS-ல் இருந்து Pull செய்ய வேண்டும்.

* பிறகு திரையில் உள்ள Exam list என்ற வாசகத்தை cick செய்து தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் ஒவ்வொரு மாணவர்களின் பெயருக்கெதிரே உள்ள Apply என்பதை click செய்து ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனியே அவர்களின் EMIS-ல் விவரங்களும், தற்போது திரையில் தோன்றும் விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவேண்டும் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதனை சரிசெய்ய வேண்டும்.

* மேலும், தமிழில் உள்ள மாணவர்களின் பெயர், பெற்றோர்களின் பெயர் அல்லது பாதுகாவலரின் பெயரைத் திருத்தம் செய்ய வேண்டுமெனில், ஏற்கனவே உள்ள பெயரை முழுவதும் நீக்கம் (Delete) செய்த பின்பு, திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

* மேலும், மாணவரின் பயிற்று மொழி, விருப்ப மொழிப்பாடம் மாற்றுத் திறனாளித் தேர்வர்கள் இருப்பின் அவர்களின் குறைபாட்டின் தன்மை அவர்கள் தேர்வெழுத கோரும் சலுகைகள் போன்ற கூடுதல் விவரங்களை சரியாக பதிவேற்றம் செய்யவேண்டும். சலுகை கோரும் மாற்றுத்திறனாளி மாணவரின் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அல்லது உரிய மருத்துவரிடம் பெற்ற மருத்துவச்சான்றினை Scan செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

* மாற்றுத்திறனாளி தேர்வர்கள் சலுகைகள் கோரும் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்.

* மாற்றுத்திறாளித் தேர்வர்களுக்கு தேர்வெழுத வழங்கப்படும் சலுகைகள் அரசுத் தேர்வுகள் இணையதளத்திற்குச் (www.dge.tn.gov.in) சென்று காணலாம்.

* வெளி மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தமாகவோ அல்லது பணி மாறுதலிலோ 9ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பில் தமிழை தாய்மொழியாக கொண்டிராத மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு மட்டும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பகுதி -1 இல் தமிழ் மொழிப்பாடம் எழுதுவதிலிருந்து விலக்களிக்க பள்ளிக் கல்வி இயக்குநர்/தனியார் பள்ளிகள் இயக்குநர் வழியாக மாணவர்களின் விவரங்கள் இவ்வலுவலகத்தில் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதையும் படிங்க: Government Employees: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி! ஓய்வூதியப் பிடித்தம் செய்யும் உத்தரவு வாபஸ்!

* தமிழ் மற்றும் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, இந்தி, சமஸ்கிருதம், அராபிக், பிரெஞ்சு மற்றும் குஜராத்தி ஆகிய மொழிப்பாடத்தில் ஏதேனும் ஒன்றை விருப்ப மொழிப்பாடமாக பகுதி IV-ல் எழுத அனுமதிக்கப்படுவர்.

* மாணவர்களது அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்த பின்னர். உறுதிமொழிப்படிவம் (Declaration form) மற்றும் மாணவரின் விவரங்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்யவேண்டும். ஒவ்வொரு மாணவரின் உறுதிமொழிப்படிவத்தை பதிவிறக்கம் செய்து சரிபார்த்த பின்னரே தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம் செலுத்திய பின்னர் மாணவர்களின் விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article