தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் அதிக மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை கடந்த 15ம் தேதி தொடங்கியது. ஆனால் அதற்கு முந்தைய நாளே விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. அதிகபட்சமாக பாரிமுனையில் 36.3 செ.மீ., கத்திவாக்கத்தில் 34.4 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது.

ரெட் அலர்ட் வாபஸ்

இந்நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி மற்றும் தேனி மற்றும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் ( மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பின்னர் வாபஸ் பெறப்பட்டது.

இதையும் படிங்க: Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!

அக்டோபர் 21 எச்சரிக்கை

இந்நிலையில் அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதி கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது 21ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், விருதுநகர், தென்காசி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கரூர் மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

கனமழை எச்சரிக்கை

அதேபோல் அக்டோபர் 22ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, புதுக்கோட்டை, கரூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் சென்னையைப் பொறுத்தவரை அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதிகளில் கனமழை இருக்கலாம் என வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அக்டோபர் 21 பள்ளிகளுக்கு விடுமுறை?

இந்நிலையில் வார விடுமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட 4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து பள்ளிகள் அக்டோபர் 21ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கனமழை பெய்யும் பட்சத்தில் அக்டோபர் 21ம் தேதி புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பில் பள்ளி மாணவர்கள் இருந்து வருகின்றனர். ஆனால் மழையின் தாக்கத்தை பொறுத்தே அந்ததெந்த மாவட்ட நிர்வாகம் முடிவு எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article