Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!

Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
News Image

மின்வெட்டு, மின் தடை என தமிழ்நாடு மின்சார வாரியத்தை நோக்கி அடுத்தடுத்த விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன் வைத்து வரும் நிலையில், அவற்றையெல்லாம் சரி செய்ய அமைச்சர் CTR நிர்மல்குமார் தன்னுடைய துறைக்கு கொண்டுவந்திருக்கும் புதிய அதிகாரிதான் ராஜேஸ் லக்கானி.

யார் இந்த ராஜேஸ் லக்கானி..?

1992 பேட்ஜ் தமிழ்நாடு கேடர் அதிகாரியான ராஜேஸ் லக்கானி, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு மூத்த அதிகாரி. கடந்த திமுக ஆட்சி காலத்திலும் மின்சாரத்துறையில் சிறப்பாக செயல்பட்டவர் . ஆனால், முன்னாள் திமுக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் லக்கானிக்கும் இடையே சில கோப்புகளை கையாள்வதில் ஏற்பட்ட சங்கடங்களால் அந்த துறையில் இருந்து விடுத்து நேரடியாக மத்திய அரசு பணிக்கு சென்றவர் அவர்.  முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்ததும் அரசின் முக்கியத் துறைகளை வழிநடத்த அனுபவம் வாய்ந்த அதிகாரி தேவை என்பதை உணர்ந்து, ராஜேஸ் லக்கானியை மீண்டும் தமிழ்நாடு அரசு பணிக்குக் வர வைத்தது தமிழ்நாடு அரசு

மின்சார வாரியத்தின் ஆணி வேர் வரை தெரிந்தவர் லக்கானி

தொடக்கத்தில் நில நிர்வாக ஆணையராக நியமனம் செய்யப்பட்ட அவரை இப்போது தமிழ்நாட்டின் முக்கியமான துறையான மின்சாரத்துறையின் தலைவராக நியமித்து உத்தரவிட்டிருக்கிறார் தலைமைச் செயலாளர் சாய் குமார். ஏற்கனவே மின்சார துறையின் அத்தனை விஷயங்களையும் அக்குவேர் ஆணிவேராய் அறிந்தவர் என்பதால் அந்த துறையை சிறப்பாக வழிநடத்தும் வகையில் இந்த நியமனம் செய்யப்பட்டிருக்கிறது.

கண்டிப்புக்கும் நேர்மைக்கும் பெயர் போன அதிகாரி

மெல்லிய குரலில் பேசுப,வராக இருந்தாலும் கண்டிப்புக்கும் நேர்மைக்கும் பெயர்போன அதிகாரி ராஜேஷ் லக்கானி. அதனால்தான் சிக்கலான மின்சாரத்துறைக்கு அவரை மீண்டும் தலைவராக நியமனம் செய்திருக்கிறது முதலமைச்சர்விஜய் தலையிலான அரசு. உயர் அதிகாரிகள் தவறு செய்தாலும், ஊழியர்கள் மெத்தனமாக இருந்தாலும் தயவு தாட்சியமின்றி நடவடிக்கை எடுக்கும் சரியான அதிகாரியாக இருக்கும் ராஜேஷ் லக்கானி, மின்சார துறையில் இருக்கும் தவறுகளை களைந்து, அந்த துறையை சிறப்பாக நிர்வகிப்பார் என்ற நம்பிக்கை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாருக்கும் இருப்பதனாலேயே இந்த நியமனம் செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தவர்

தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரியாகவும் பணியாற்றிய ராஜேஷ் லக்கானி, 2016 சட்டமன்ற தேர்தலையும், 2019 நாடாளுமன்றத் தேர்தலையும் சிறப்பாக நடத்தி முடித்தவர். தொடக்கத்தில் தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியராக பதவி வகித்த அவர், வீட்டு வசதி துறை, பள்ளிக் கல்வித் துறை, வருவாய்த் துறை என பல பொறுப்புகளில் பணியாற்றி சிறப்பாக செயல்பட்டவர். குறிப்பாக, பத்திரிகையாளர்களிடம் கண்ணியமாகவும் ஒரு நண்பரை போலவும் நடந்துகொள்ளும் பண்புள்ளவராக அறியப்படுபவர் ராஜேஷ் லக்கானி. அதே நேரத்தில் சாமானிய மக்கள் அரசு நிர்வாகத்தால் எந்த சூழலிலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கும் அவரைத்தான், தற்போது மின்சாரத்துறையின் தலைவராக நியமித்திருக்கிறது விஜய் தலைமையிலான அரசு.

தலைமைச் செயலாளராக பிரகாசமான வாய்ப்பு

இன்னும் சில மாதங்களில் பணி நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ள தலைமைச் செயலாளர் சாய்குமார் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு அடுத்து தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் பதவியை அலங்கரிக்கும் வாய்ப்பும் ராஜேஸ் லக்கானிக்கு பிரகாசமாக இருக்கிறது. அதற்கான முன்னோட்டமாகதான் இந்த நியமனம் செய்யப்பட்டிருக்கிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks