ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பிரதமர் மோடியும் ஆழ்ந்த நட்பை பகிர்ந்து கொள்கின்றனர். சமீபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புதின் இந்தியா வந்திருந்தார். அப்போது, அவர்களின் நட்பு பரவலாக பாராட்டப்பட்டது. தற்போது புதின், பிரதமர் மோடியை பாராட்டியுள்ளதோடு, தனக்கு நட்புறவு உள்ள உலகத் தலைவர்களின் பட்டியலில் அவரையும் சேர்த்துள்ளார். மேலும், உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் பிரச்னையை பிரதமர் மோடி தொடர்ந்து எழுப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதின் கூறியது என்ன.?

"நமக்கிடையே மிகவும் நல்ல மற்றும் நட்புறவான உறவுகளும், சிறந்த தனிப்பட்ட தொடர்புகளும் இருந்தபோதிலும், உக்ரைனில் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் பிரச்னையை தொடர்ந்து எழுப்பி, அது குறித்து கேள்விகளை எழுப்பும் உலகத் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர். இரு தரப்பினருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை காண்பதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்," என்று புதின் கூறினார்.

“பிரதமர் மோடிக்கு நன்றி“

மேலும், "இது தொடர்பாக, இயல்பாகவே பிரதமர் ஒரு நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்கிறார். ஆனால், அவர் இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் ஆர்வமாக உள்ளார். இதை நேரடியாகச் சொல்வது எனது கடமை என்று நான் உணர்கிறேன். மேலும், பிரதமரின் கருத்துக்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த மோதலை அமைதியான வழிகளிலும் கூடிய விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அவரது விருப்பத்திற்கு நாங்கள் அவருக்கு நன்றி கூறுகிறோம்." என்று புதின் தெரிவித்தார்.

“ரஷ்யா தாக்கப்பட்டால் தக்க பதிலடி கிடைக்கும்“

அதோடு, ஐரோப்பிய நாடுகளை தாக்க ரஷ்யா திட்டமிடவில்லை என்றும், ஆனால் யாரேனும் அவ்வாறு செய்தால், தன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் கொண்டு பதிலடி கொடுக்கப்படும் என்றும் புதின் தனது முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். மேலும், "ரஷ்யக் கூட்டமைப்பின் மீது, குறிப்பாக கலினின்கிராட் அல்லது வேறு சில பகுதிகளைக் குறிவைத்து நேரடித் தாக்குதல் நடத்தப்பட்டால், ரஷ்ய கூட்டமைப்பிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவது குறித்த கேள்வி நிச்சயமாகவும் உடனடியாகவும் விவாதப் பொருளாக வரும். இது அச்சுறுத்தும் முயற்சி அல்ல, எங்களை அச்சுறுத்தும் முயற்சிகளுக்கு இது ஒரு பதிலடியாகும்," என்று புதின் கூறினார்.

Source: Read Full Article