பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
News Image

சென்னையில் பெருகிவரும் பாேக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ மூலம் முழு சென்னையையும் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை தொடக்கம்:

தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையிலும், விமான நிலையம் முதல் கோயம்பேடு வழியாக சென்ட்ரல் வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரையிலும் ரயில்கள் இயக்கப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடம் நாளை முதல் தொடங்கப்படுகிறது. இந்த வழித்தடத்தை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை காலை சென்னை வருகிறார். முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

பலத்த பாதுகாப்பு:

நாளை தொடங்க உள்ள இந்த பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ சேவையில் போக்குவரத்து நெருக்கடி மிகப்பெரிய அளவில் இந்த வழித்தடத்தில் குறையும் என்று கருதப்படுகிறது. பிரதமர் மோடி சென்னை வருவதை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதுடன் பிரதமர் மோடியும், முதலமைச்சர் விஜய்யும் மெட்ரோவில் இணைந்து பயணிகளுடன் பயணிப்பார்கள் என்று கருதப்படுகிறது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டும், மெட்ரோ திறப்பு விழாவை முன்னிட்டும் அந்த பகுதிகளை அலங்காரப்படுத்தும் பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.

எத்தனை நிலையங்கள்?

தற்போது இந்த வழித்தடத்தில் முதற்கட்டமாக 11 நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

1. பூந்தமல்லி பைபாஸ்

2. பூந்தமல்லி பேருந்து நிலையம்

3. பூந்தமல்லி அரசு மருத்துவமனை

4. காரைச்சாவடி

5. குமணஞ்சாவடி

6. காட்டுப்பாக்கம்

7.ஐயப்பன்தாங்கல்

8. ராமச்சந்திரா மருத்துவமனை

9. போரூர் பைபாஸ்

10. போரூர் ஜங்ஷன்

11. வடபழனி

வடபழனிக்கும், போரூருக்கும் இடையே உள்ள சாலிகிராமம், ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம், ஆலப்பாக்கம் ஆகிய மெட்ரோ நிலையங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த நிலையங்கள் இன்னும் சில மாதங்களில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த நிலையங்கள் திறக்கப்படவில்லை.

கட்டணம் எப்படி?

நாளை தொடங்க உள்ள இந்த வழித்தடத்தில் அதிகபட்சமாக ரூபாய் 40 வரை கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி வருகை மற்றும் மெட்ரோ ரயில் நிலைய திறப்பு விழாவை முன்னிட்டு நாளை போக்குவரத்திலும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதியதாக தொடங்கப்பட உள்ள இந்த வழித்தடம் மிகவும் முக்கியமான வழித்தடம் என்பதால் இந்த வழித்தடத்தில் தொடக்க நாட்களிலே தினசரி குறைந்தது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணிப்பார்கள் என்று கருதப்படுகிறது. பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இந்த வழித்தடத்தில் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவது குறித்து மெட்ரோ நிர்வாகம் ஆய்வு செய்ய உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks