தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அரிசி, கருப்பு, சர்க்கரை மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலை தாறுமாறாக உயர்ந்து பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது எண்ணெய் விலையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதாவது உடல் சூட்டைக் குறைத்து உடலுக்கு நன்மை பயக்கும் எள்ளிலிருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெய் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது.

90 நாட்களில் எள் சாகுபடி

இந்தியாவில் தமிழகம், ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே எள் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் ஈரோடு, விழுப்புரம், கரூர், திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் பல்வேறு பருவங்களில் எள் பயிடப்படுகிறது. விதைத்து 85 முதல் 90 நாட்களில் எள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த பயிருக்கு தண்ணீரும் அதிகம் தேவையில்லை.

இதையும் படிங்க: Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..

எள் விளைச்சல் சரிவு

ஏக்கருக்கு ஏறத்தாழ 300 முதல் 350 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஆனால் இம்முறை தமிழகத்தில் எள் விளைச்சல் கணிசமாக சரிந்தது. எதிர்பார்த்த அளவுக்கு வெளிமாநிலகளில் இருந்தும் வரவில்லை. இதனால் எள்ளை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் நல்லெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.45 வரை அதிகரித்துள்ளது. முன்பு பிரபல நிறுவனங்களின் நல்லெண்ணெய் ஒரு லிட்டர் ரூ.365-க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.410 வரை விற்கப்படுகிறது.

சூரியகாந்தி எண்ணெய் விலை உயர்வு

இந்தியாவின் சூரியகாந்தி எண்ணெய் தேவையில் 60 சதவீதம் வரை ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது சர்வதேச சந்தையில் சூரியகாந்தி எண்ணெய்யின் விலை உயர்ந்ததன் எதிரொலியாக, உள்நாட்டிலும் இதன் விலை ரூ.165-ல் இருந்து ரூ.190 ஆக உயர்ந்துள்ளது. அத்தியாவசிய சமையல் எண்ணெய் வகைகளின் இந்த திடீர் விலை உயர்வு இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article