TN Govt New Secretariat: சென்னையில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய தலைமை செயலகத்தை அமைக்க 13.22 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறதாம்.

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை செயலகத்திற்கான இடம்:

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கப்படுவது தொடர்பான அறிவிப்புக்கு, அரசியல் ரீதியாக மட்டுமின்றி மீனவ சமுதாய மக்களிடையேயும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனால், 13.22 ஏக்கர் பரப்பளவிலான பல்லவன் இல்ல வளாகத்தை தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசு, மாற்று இடமாக பரிசீலித்து வருகிறதாம். தற்போதைய சூழலில் இந்த இடமானது பெருநகர போக்குவரத்து கழகம் மற்றும் மாநில விரைவு போக்குவரத்துக் கழகம், ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களாக மட்டுமின்றி, இரண்டு MTC பணிமனைகளாகவும் இருந்து வருகிறது.

பல்லவன் இல்லம் இடம் உறுதியா?

புதிய தலைமை செயலகத்திற்கான மாற்று இடங்களாக பரிசீலனையில் இருப்பவற்றில் பல்லவன் இடம் ஒன்றாக இருந்தாலும், இதுகுறித்த இறுதி முடிவு ஏதும் இதுவரை எட்டப்படவில்லை என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த ஒரு வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இந்த இடமானது ஏற்கனவே இருக்கும் கட்டிடங்களுடன் சேர்ந்த்து சுமார் 13.22 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. புதிய தலைமை செயலக வளாகத்திற்கு பொருத்தமானதகாவும் இருக்கும் என கூறப்படுகிறது. ஒருவேளை இந்த இடம் தேர்வு செய்யப்பட்டால், தலைமை செயலக ஊழியர்கள் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ வாயிலாக எளிதாக பயணிக்க முடியும்.

அரசுக்கு தலைவலியில்லாத இடம்..!

பல்லவன் இல்லத்தை தேர்வு செய்வதன் மூலம் அரசுக்கு இரண்டு சுமூகமான பலன் உள்ளது. அதன்படி, இந்த இடம் முழுமையாகவே அரசுக்கு சொந்தம் என்பதால் கூடுதலாக நிலம் எதையும் கையகப்படுத்த வேண்டியதில்லை. அதோடு, மக்களை வெளியேற்றுவது அல்லது தன்னிச்சையான நடவடிக்கை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் ஏற்படாது. எனவே இந்த இடத்தை தேர்வு செய்வது அரசியல் ரீதியாகவும் அரசுக்கு எளிதானது. கூடுதலாக தலைமை செயலகத்தில் பணி செய்பவர்கள் மட்டுமின்றி, தினசரி அங்கு செல்லும் நூற்றுக்கணக்கான மக்கள் எளிதாக பயணிக்க தேவையான போக்குவரத்து வசதிகளும் இயல்பாகவே வலுவாக உள்ளன. சுமார் ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு ஓமந்தூரார் பகுதியில் கட்டிய தலைமை செயலகத்திற்கு அருகிலேயே, பல்லவன் இல்லம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: France Protest: பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்

பேருந்து பணிமனைகளுக்கான மாற்று இடம்..!

பல்லவன் இல்லம் புதிய தலைமை செயலகத்திற்காக தேர்வு செய்யப்பட்டால், தற்போது அங்கு செயல்பட்டு வரும் எம்டிசி தலைமையகத்திற்கு மாற்று இடம் தேட வேண்டி இருக்கும். அந்த சூழலில் சென்னை கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையம், போக்குவரத்து கழகங்களின் தலைமை இடமாக மாற்றப்படலாம். இதனால் நிர்வாகம் மட்டுமின்றி பேருந்துகளின் இயக்கத்தையும் ஒரே வளாகத்தில் இருந்தபடி கண்காணிக்கும் வாய்ப்பும் உருவாகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரூ.1.000 கோடியில் புதிய தலைமை செயலகம்:

இடநெருக்கடியை கருத்தில் கொண்டு ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில், 20 லட்சம் சதுர அடிபரப்பளவில் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்து இருந்தார். இதற்காக பட்டினப்பாக்கத்தில் சுமார் 25 ஏக்கர் நிலம் அடையளம் காணப்பட்டது. ஆனால் அதற்கு எழுந்த பல்வேறு எதிர்ப்புகளை தொடர்ந்து புதிய இடம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி எம்டிசி பணிமனை 7.55 ஏக்கர், பழைய விரைவுப் பேருந்து வளாகம் 3.957 ஏக்கர் மற்றும் பல்லவன் இல்லம் 1.701 ஏக்கர் என மொத்தம் 13.22 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாம்.

Source: Read Full Article