Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!

Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
News Image

சென்னையில் மெட்ரோ சேவையை தொடங்கி வைக்க வருகை தரும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள உள்ளார். அதனைப் பற்றிக் காணலாம்.

வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ சேவை

சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அதில் ஒரு பகுதியாக பூந்தமல்லி - வடபழனி இடையேயான புதிய மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது. இந்த சேவையை பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கின்றனர். இதனை முன்னிட்டு சென்னை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ நிலையங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

15 கிலோமீட்டர் தொலைவிலான இந்த மெட்ரோ சேவையில் 11 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பூந்தமல்லி புறவழிச்சாலை, பூந்தமல்லி பேருந்து நிலையம், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, கரையான் சாவடி, குமணன் சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியாரகரம், போரூர் புறவழிச்சாலை, போரூர் சந்திப்பு மற்றும் வடபழனி ஆகிய 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் இந்த வழித்தடத்தில் உள்ளன. அதேசமயம் ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், சாலிகிராமம் கிடங்கு, சாலிகிராமம் ஆகிய மெட்ரோ ரயில் நிலைய பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. விரைவில் அவை பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பச்சை மற்றும் நீல வழித்தடம் செயல்பட்டு வரும் நிலையில், பூந்தமல்லி - வடபழனி மஞ்சள் நிற வழித்தடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் மெட்ரோ சேவை 9 மணி வரை செயல்படும். நாளை (அக்டோபர் 12) முதல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த சேவை இயங்கும். இதனிடையே சென்னை வரும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்வுகள்

இதுதொடர்பாக பிரதமர் மோடியின் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவின்படி, “அக்டோபர் 11 அன்று, சென்னையில் ரூ. 13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நிறைவடைந்த திட்டங்களின் துவக்க விழாவும் நடைபெறுகின்றன.சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாவது கட்டத்தின் பூந்தமல்லி-வடபழனி வழித்தடம் துவக்கி வைக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலங்கள் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் துறைமுகம் சார்ந்த உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. சென்னை ஐஐடியில் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையம் (எஸ்ஜிபிசி ) துவக்கிவைக்கப்படுகிறது.கல்வித்துறையில் மகத்தான பணிகளை மேற்கொண்டுள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழாக் கொண்டாட்டங்களிலும் தான் பங்கேற்க இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks