Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி

Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
News Image

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

226 ரன்கள் டார்கெட்:

மைதானம் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருந்ததால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் பட்டாசாய் வெடித்தனர். டிம் செய்ஃபெர்ட், ஃபின் ஆலன் அதிரடியான தொடக்கத்தை அளிக்க, கிளென் பிலிப்ஸின் அபாரமான 82 ரன்கள், பீவோன் ஜேக்கப்ஸின் 31 ரன்களும் விளாச இந்தியாவிற்கு இலக்காக 226 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாம்சன் அதிரடி:

பிரம்மாண்டமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சாம்சன் - அபிஷேக் சர்மா அதிரடி தொடக்கம் அளித்தனர். இருவரும் இணைந்து அபாரமாக ஆட இந்திய அணி பேட்டிங்கில் அசத்தியது. குறிப்பாக, சாம்சன் பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினார்.

அபாரமாக ஆடிய அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 29 ரன்கள் எடுத்து அவுட்டாக சாம்சன் தனது அதிரடியைத் தொடர்ந்தார். அடுத்து வந்த திலக் வர்மா 11 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து அவுட்டாக, அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார்.

ஸ்ரேயாஸ் அசத்தல்:

சாம்சன் பவுண்டரி மழையாய் பொழிந்த நிலையில், சான்ட்னர் பந்தில் போல்டானார். அவர் 33 பந்துகளில் 8 பவுண்டரி 4 சிக்ஸருடன் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார். இஷான் கிஷன் 1 ரன்னில் அவுட்டாக, அக்ஷர் படேல் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஒத்துழைப்பு அளித்தார்.

இருவரும் இணைந்து அபாரமாக ஆடினர். அக்ஷர் படேல் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அவுட்டாக நமன் தீர் களமிறங்கினார். இருவரும் போட்டி போட்டு ரன்கள் எடுக்க அபாரமாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் அவுட்டானார். அவர் 28 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஃபினிஷ் செய்த நமன் தீர்:

கடைசியில் நெருக்கடியான தருணத்தில் நமன் தீர் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் 15 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸர் விளாச இந்திய அணி 2 பந்துகள் மீதம் வைத்து 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நமன் தீர் 42 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தது.

நியூசிலாந்து அணியின் மேட் ஹென்றி 3.4 ஓவர்களில் 57 ரன்களை வாரி வழங்கினார். ஆடம் மிலினே 3 ஓவரில் 43 ரன்களையும், பெர்குசன் 3 ஓவர்களில் 34 ரன்களையும் வாரி வழங்கினர். இந்த தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியிருப்பதால் வீரர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.வெளிநாட்டு மண்ணில் இந்திய வீரர்கள் ஜாெலித்தால் அது எப்போதும் தனித்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. ஐபிஎல் தொடர் மூலமாக தனி கவனத்தை ஈர்த்த நமன்தீர் தற்போது இந்திய அணிக்காக பின்வரிசையில் களமிறங்கி தனக்கென தனி இடத்தைப் பிடித்து வருகிறார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks