திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது,

பாலியல் வன்கொடுமையா? போதைப்பொருளா?

இரு கட்சிகளுக்கு இடையேதான் போட்டி என்று கூறினார். இல்லை, இல்லை மின்வெட்டிற்கும் இடையேயும், அரிவாள் வெட்டிற்கும் இடையேதான் போட்டி என்று சொன்னேன். அது இன்று மாறி பாலியல் வன்கொடுமையா? போதைப்பொருளானு? அவை இரண்டுக்கும் இடையேதான் போட்டி நடந்து வருகிறது.

தவெக ஆட்சியில் இன்றைக்கு பாலியல் வன்கொடுமையா? போதைப்பொருள் நடமாட்டமா? என்ற போட்டி தான் நடைபெற்று கொண்டிருக்கிறது கழக தலைவர் திரு @mkstalin அவர்கள் https://t.co/Li65p1BgvT

— DMK IT WING (@DMKITwing) October 25, 2026

மேடைக்கு மேடை அவர் என்ன கத்துகிறார் என்றால் தீயசக்தி, தீயசக்தி என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த தீய சக்தி யார்? என்று நாட்டு மக்களுக்கு நன்றாக தெரிந்து கொண்டிருக்கிறது. ஆகவே, உங்களை அன்போடு கேட்டுக்கொள்வது, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நாட்டில் நடக்கும் அநியாய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.

6 மாசம் தாங்காது:

தொடக்கத்தில் சொன்னேன். 6 மாதம் என்று. ஆனால், 6 மாதம் கூட நிலைக்க முடியாத நிலையில்தான் இந்த ஆட்சி போய் கொண்டிருக்கிறது. விரைவில் இந்த ஆட்சியை அப்புறப்படுத்த தயாராகுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆட்சி கவிழும்:

தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைத்துள்ள தவெக ஆட்சி விரைவில் கவிழும் என்று திமுக-வினர் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவெக எம்எல்ஏ-க்களிடம் பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து அந்த விவகாரம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதன்பின்பு, சமீபத்தில் நடந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக-விடம் திமுக, அதிமுக தோல்வி அடைந்தது. இந்த இடைத்தேர்தலிலும் திமுக தோல்வி அடைந்த நிலையில், திமுக-விற்கு இது பின்னடைவாகவே அமைந்தது.

கடந்த தேர்தலில் மிக எளிதாக வெற்றி பெற்றுவிடுவோம் என்ற திமுக-வினருக்கு தவெக மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. குறிப்பாக, ஒட்டுமொத்த தமிழ்நாடுமே எதிர்பார்க்காத விதமாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இது திமுக-வினருக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.

திமுக - தவெக:

இதன்பின்பு, திமுக - தவெக-வினர் இடையே இணையத்தில் வார்த்தை மோதல் நாளுக்கு நாள் பெரியளவில் வெடித்து வருகிறது. சட்டமன்ற கூட்டத்தொடரிலும் இரு தரப்பினரும் காரசாரமான வாக்குவாதங்களை முன்வைத்தனர்.

விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் தினசரி நடக்கும் சட்டம் ஒழுங்கு குற்றங்களை தினசரி திமுக பட்டியலிட்டு விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தவெக அரசு மீது அதிமுக-வும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.

Source: Read Full Article