"உலக விபத்து காய தினம்"

சென்னை மியாட் மருத்துவமனையில் உலக விபத்துக் காய தின நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் , சாலை விபத்துகள் குறித்தும் , பொது மக்கள் சாலைகளில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

சாலை விபத்துகளால் தனி நபர்களுக்கும் குடும்பங்களுக்கும் ஏற்படும் கடுமையான பாதிப்புகளைச் சுட்டிக் காட்டிய அவர் , விபத்துகளைத் தடுப்பதற்காக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார். மேலும் , விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில சாலை விபத்துகளையும் அவர் நினைவு கூர்ந்து பேசினார்.

மியாட் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் ;

2026-ஆம் ஆண்டிற்கான உலக விபத்துக் காய தினத்தின் கருப்பொருளாக முதலுதவியுடன் சிகிச்சை முடிந்து விடக் கூடாது. கடுமையான விபத்தில் சிக்குபவர்களுக்கு எலும்பு முறிவுகளைச் சரி செய்வது மட்டுமே போதுமானதல்ல.

மூளை, மார்பு, வயிறு மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாட்டில் ஏற்படும் பாதிப்புகளுக்குப் பல்வேறு துறை நிபுணர்கள் இணைந்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 12 அன்று பேராசிரியர் டாக்டர் பி.வி.ஏ. மோகன்தாஸ் அவர்களால் 70 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகத் தொடங்கப்பட்ட மியாட் , தற்போது பன்னோக்கு மையமாக வளர்ந்து , ஆண்டு தோறும் 6,000-க்கும் மேற்பட்ட விபத்துக் காய அறுவை சிகிச்சைகளை 50-க்கும் மேற்பட்ட மூத்த நிபுணர்களின் உதவியுடன் மேற்கொண்டு வருகிறது.

மேலும் , பாலமுருகன் என்ற நோயாளியின் நீண்ட மீட்சிப் பயணத்தில் , பல கட்ட அறுவை சிகிச்சைகள் மற்றும் பல மாத சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. விபத்திலிருந்து உயிர் பிழைப்பது தொடக்கம் மட்டுமே என்றும் , முறையான மற்றும் சரியான பாலிட்ராமா சிகிச்சையின் மூலம் நோயாளிகளின் சுயசார்பை மீட்டெடுத்து , அவர்களை அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பச் செய்வதே மிக முக்கியம் என்றும் மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article