Maharashtra: பிங்க் ரேபிடோவில் ஓட்டுநராக வந்த ஆண்.. ஷாக்கான இளம்பெண்.. கடைசியில் ட்விஸ்ட்!

Maharashtra: பிங்க் ரேபிடோவில் ஓட்டுநராக வந்த ஆண்.. ஷாக்கான இளம்பெண்.. கடைசியில் ட்விஸ்ட்!
News Image

மகாராஷ்ட்ராவில் பெண்களுக்கான பிங்க் ரேபிடோவை புக் செய்த பெண்ணுக்கு ஓட்டுநராக தன்பாலின ஈர்ப்பாளர் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிங்க் ரேபிடோ சேவை

ரயில், பேருந்துகளை விட தற்போது பெருநகரங்களில் அனைவரும் பயன்படுத்தும் சேவையாக பைக் டாக்ஸிகள் உள்ளது. ஓலா, உபெர், ரேபிடோ போன்ற நிறுவனங்கள் இத்தகைய பைக் டாக்ஸி சேவைகளை நடத்துகின்றது. தங்கள் வாழ்க்கை பொருளாதார நிலையை சமாளிக்க ஆண்கள், பெண்கள் என லட்சக்கணக்கானோர் இதன்மூலம் பயனடைந்து வருகின்றனர். இந்த பைக் டாக்ஸி சேவையில் பெண்கள் சௌகரியத்தை உறுதி செய்யும் பொருட்டு பிங்க் ரேபிடோ சேவை கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது ஆண் ஓட்டுநர்களுக்கு பதிலாக பெண் ஓட்டுநர்கள் வருவார்கள். இது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது.

மகாராஷ்ட்ராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இதனிடையே மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண்ணுக்கு கசப்பான சம்பவம் இந்த பிங்க் ரேபிடோ சேவையில் நடைபெற்றுள்ளது. இதனை
ஷாலினி சதுர்வேதி என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். அதில்,”ஒரு பெண் ஓட்டுநரை எதிர்பார்த்து நான் பிங்க் ரேபிடோ சேவையை முன்பதிவு செய்தேன். அடுத்த சில நிமிடங்களில் ஒரு ஆண் ஓட்டுநர் என்னை அழைத்து இருப்பிடத்தை உறுதி செய்தார். பைக் டாக்ஸி முன்பதிவுப் பக்கத்தில் ஒரு பெண்ணின் புகைப்படம் காட்டப்பட்டிருந்ததால் எனக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. இருந்தாலும் பைக் டாக்ஸி வரும் வரை காத்திருந்தேன். ஆனால் அங்கு ஒரு ஆண் ஓட்டுநர் வந்துள்ளார். நான் பிங்க் சேவையைத் தேர்ந்தெடுத்தேன் என ஷாலினி கூறியுள்ளார்.

அதற்கு அந்த நபர், “மேடம், நான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர்” என கூறினார். இதை சொல்ல அந்த நபருக்கு எவ்வளவு தைரியம் இருக்கும். நான் ந்தப் பயணத்தைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்து கேன்சல் செய்ய முயன்றேன். அப்போது நான் புக் செய்ததற்கு ரூ.25 என காட்டப்பட்ட நிலையில் ரத்து செய்தால் அபராத கட்டணமாக ரூ.15 வசூலிக்கப்பட்டது.

அந்த செயலியில் காட்டப்பட்ட சுயவிவரப் புகைப்படம் ஒரு பெண்ணுடையது போல் தோன்றியது குறித்து எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இது பெண்கள் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளையே காட்டுகிறது. ஒரு ஆண் நான் எங்கு வசிக்கிறேன் என்பதை இதன்மூலம் அடையாளம் கண்டுக்கொண்டார். நாளை எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த நாட்டில் பெண்களின் பாதுகாப்பு என்பது வெறும் லாபம் தரும் ஒரு பேரமாகிவிட்டது. இது ஒரு கேலிக்கூத்து என ஷாலினி சதுர்வேதி கடுமையாக பேசியுள்ளார். இந்த நிலையில் ஷாலினி பதிவிற்கு பதிலளித்த ரேபிடோ நிறுவனம் மன்னிப்பு தெரிவித்தது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் என்றும், பிங்க் சேவைக்கு பெண் ஓட்டுநர்கள் தான் வருவார்கள் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks