Chennai Lighthouse To Thiru Vi Ka Bridge Elevated Corridor: சென்னை கலங்கரை விளக்கம் தொடங்கி திரு.வி.க., மேம்பாலம் வரையிலான உயரடுக்கு மேம்பாலத்திற்கு விரிவான திட்ட அறிக்கை முதலில் தயாரிக்கப்பட உள்ளது.

கலங்கரை விளக்கம் உயரடுக்கு மேம்பாலம்:

சென்னை கலங்கரை விளக்கம் தொடங்கி அடையாறு அருகே திரு.வி.க. மேம்பாலம் வரையில் முன்மொழியப்பட்ட உயரடுக்கு மேம்பாலம் திட்டத்தை, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது. இந்த திட்டமானது மெரினா மற்றும் சாந்தோம் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், அடையாறு நோக்கிய இணைப்பை மேம்படுத்தவும் வகுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த பிரமாண்ட திட்டம் கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.

4KM நீளம் - ரூ.1000 கோடி பட்ஜெட்..!

கலங்கரை விளக்கம் தொடங்கி திரு.வி.க. பாலம் வரையிலான இந்த உயரடுக்கு மேம்பாலம் 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுமார் 1000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 38 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து சமர்பிக்க தமிழ்நாடு அரசு டெண்ட கோரியுள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவகள் 29 ஆயிரத்து 500 ரூபாயை கட்டணமாக செலுத்தலாம் என கூறப்படுகிறது. பணிகளை மேற்கொள்ள 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

DPR-ல் இடம்பெறும் விவரங்கள்..

நெடுஞ்சாலைத்துறை கோரும் இந்த டெண்டர் வாயிலாக, 4 கி லோ மீட்டருக்கான பறக்கும் சாலையின் தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வது, போக்குவரத்து ஆய்வு, மண் பரிசோதனை, மழைநீர் வடிகால், சந்திப்பு மேம்பாடு, சர்வீஸ் சாலைகள் வடிவமைப்பு தொடர்பான விவரங்கள் இடம்பெறும். கூடுதலாக மேம்பாலத்தின் முழுமையான வரைபடங்கள், செலவு மதிப்பீடு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் ஆகியவையும் வழங்கப்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்: VanniArasu: விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு

பரிசீலனையில் உள்ள இரண்டு வழித்தடங்கள்:

முன்மொழியப்பட்ட இந்த வழித்தடம், கலங்கரைப் பகுதியை மலர் மருத்துவமனைக்கு அருகிலுள்ள அடையாறு படகுத்துறையுடன் இணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இரண்டு சாத்தியமான வழித்தடங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று காமராஜர் சாலை மற்றும் சந்தோம் நெடுஞ்சாலை வழியாகவும், மற்றொன்று பட்டினப்பாக்கம் சுற்றுச் சாலை வழியாகவும் செல்கிறது. அது விரிவான திட்ட அறிக்கை மூலம் இறுதி செய்யப்படும் என எதிபார்க்கப்படுகிறது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கன்சல்டன்ட் நியமிக்கப்பட்ட பிறகு, அடுத்தகட்டமாக கட்டுமானப் பணிக்கான டெண்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேம்பாலத்திற்கான தேவை என்ன?

சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில், குறிப்பாக பீக் ஹவர் நேரங்களில் கணிசமான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. பள்ளிகள், மத நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பரபரப்பான பாதசாரி மண்டலங்கள் ஆகியவை இருப்பதால், வழக்கமான சாலை விரிவாக்கப் பணிகள் இங்கு கடினமாகின்றன. இந்நிலையில் மேம்பாலமானது, போக்குவரத்துக்கான மாற்றுப் பாதையை வழங்குவதோடு, கீழேயுள்ள சாலைகளில் ஏற்படும் நெரிசலையும் குறைக்கக்கூடும். மேலும் லைட்ஹவுஸ், பட்டினப்பாக்கம், சந்தோம் மற்றும் அடையாறு பகுதிகளுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் பொருத்தமான நுழைவு மற்றும் வெளியேறும் சரிவுப்பாதைகள் அமைப்பது குறித்தும் விரிவான திட்ட ஆராயும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் போக்குவரத்து நெரிசல்களை உருவாக்காமல், வாகனங்கள் மேம்பாலச் சாலையில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் இந்த அணுகல் புள்ளிகள் முக்கியமானதாக இருக்கும்.

Source: Read Full Article