Kuwait Ship Attacked Hormuz: ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்கப்பட்ட குவைத் எண்ணெய் கப்பல்; 5 இந்திய மாலுமிகளின் நிலை என்ன.? விவரம்

Kuwait Ship Attacked Hormuz: ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்கப்பட்ட குவைத் எண்ணெய் கப்பல்; 5 இந்திய மாலுமிகளின் நிலை என்ன.? விவரம்
News Image

ஹார்முஸ் ஜலசந்தியில் எறிபொருளால் தாக்கப்பட்ட குவைத் கொடி ஏற்றப்பட்ட கச்சா எண்ணெய் கப்பலில் இருந்த ஐந்து இந்தியர்கள் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த ஐந்து இந்தியர்களையும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நடவடிக்கையை தாங்கள் ஒருங்கிணைத்ததாக, ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நடவடிக்கையில் தொடர்ச்சியான ஆதரவையும் உதவியையும் வழங்கிய ஓமன் அதிகாரிகளுக்கு தூதரகம் தனது நன்றியையும் தெரிவித்தது.

ஹார்முஸ் ஜலசந்தியில் எம்டி காசிமா III என்ற எண்ணெய் கப்பல் மீது எறிபொருள் தாக்கியதாக தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்த ஐந்து இந்தியர்கள் பின்னர் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஓமன் அதிகாரிகளுடன் இணைந்து இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தூதரகம் கூறியது.

Earlier today, the Mission coordinated rescue of five Indian nationals on board the Kuwait-flagged tanker MT Kazimah III, struck by a projectile in the Strait of Hormuz.

All 5 Indian nationals have been shifted ashore safely.

We thank the Omani authorities for their continued…
— India in Oman (Embassy of India, Muscat) (@Indemb_Muscat) October 2, 2026

குவைத் கொடியுடன் பயணித்த எண்ணெய் கப்பல்

எம்டி காசிமா III என்பது தற்போது குவைத் கொடியின் கீழ் இயங்கி வரும் ஒரு கச்சா எண்ணெய் கப்பலாகும். அந்த கப்பல், டோகோவின் லோமே துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்தது. எறிபொருள் தாக்குதலைத் தொடர்ந்து, கப்பலில் இருந்த இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்தியத் தூதரகம் ஒரு உடனடி மீட்பு நடவடிக்கையை ஒருங்கிணைத்தது.

பாரசீக வளைகுடா மற்றும் அதை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் வர்த்தகக் கப்பல்களில் பணிபுரியும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வரும் வேளையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வளைகுடாவில் 4,500-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள்

பிராந்தியத்தில் உள்ள பல்வேறு வர்த்தகக் கப்பல்களில் 4,500-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் உள்ளனர் என்றும், இதில் செயல்பாட்டில் உள்ள 12 சரக்குக் கப்பல்களில், 163 இந்திய மாலுமிகள் அடங்குவர் என்றும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் செவ்வாயன்று தெரிவித்தார்.

ஜெயஸ்வாலின் கூற்றுப்படி, தற்போது பாரசீக வளைகுடாவில் இந்தியக் கொடி ஏந்திய 6 வர்த்தகக் கப்பல்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, இந்தியாவிற்காக சரக்குகளை ஏற்றிச் செல்லும் 6 வெளிநாட்டுக் கொடி ஏந்திய கப்பல்களும் உள்ளன. இந்த 12 கப்பல்களிலும் சுமார் 163 இந்திய மாலுமிகள் பணியாற்றுகின்றனர்.

கண்காணிக்கப்பட்டுவரும் இந்தி மாலுமிகளின் பாதுகாப்பு

மேலும், இப்பகுதியில் இயங்கும் பல்வேறு வர்த்தகக் கப்பல்களில் 4,500-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார். இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம், இந்திய தூதரகங்கள் மற்றும் உள்ளூர் தரப்பினருடன் இணைந்து, கப்பல்களின் நடமாட்டத்தையும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பையும் கண்காணித்து வருகிறது.

தேவைக்கேற்ப இந்தியத் தூதரகங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினர் மூலம் மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜெயஸ்வால் கூறினார். வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய கடல்சார் தொழிலாளர்களின் பாதுகாப்பும், நல்வாழ்வும், இந்தியாவிற்கு ஒரு முன்னுரிமையாக தொடர்கிறது என்றும் அவர் கூறினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks