Koyambedu Market: அப்க்ரேடாகும் கோயம்பேடு சந்தை..! சாலை, மழைநீர் வடிகால்களை மேம்படுத்த CMDA திட்டம்

Koyambedu Market: அப்க்ரேடாகும் கோயம்பேடு சந்தை..! சாலை, மழைநீர் வடிகால்களை மேம்படுத்த CMDA திட்டம்
News Image

CMDA On Koyambedu Market: மழைநீர் வடிகால் அமைக்கப்பட்ட பிறகு கோயம்பேடு சந்தை வளாகத்தில் மழைநீர் தேங்குவது குறைந்துள்ளதாக, CMDA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு சந்தை வளாகத்திற்கு அப்க்ரேட்:

சென்னை பெருநகருக்கான மொத்த மற்றும் சில்லறை காய்கறி, பழங்கள் மற்றும் பூ வியாபாரத்தில் கோயம்பேடு சந்தை மிக முக்கிய பங்காற்றி வருகிறது. ஆனால், போதிய உட்கட்டமைப்பு இல்லாதது, குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டுவது, முறையான திடக்கழிவு மேலாண்மை இல்லாதது பெரும் பிரச்னையாக உள்ளது. இத்தகைய நடவடிக்கைகளால், குறிப்பாக மழைக்காலங்களில் சந்தைக்கு செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமானது கோயம்பேடு சந்தை வளாகத்தில் சாலைகளில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பது மற்றும் மழைநீர் வடிகால்களை மேம்படுத்துவது தொடர்பான பணிகளை முன்மொழிந்துள்ளது. இதற்கு 8 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்தை வளாகத்தில் மழை நீர் தேங்குவது மற்றும் வடிகாலில் உள்ள அடைப்புகள் ஆகியவற்றை நீக்குவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.

சந்தை வளாகத்தில் தொடரும் பிரச்னைகள்:

பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கும் பிரச்னை என்பது, வடிகால்கள் அமைக்கப்பட்ட பிறகு பெரிய அளவில் குறைந்துள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். அதேநேரம், L மற்றும் M ப்ளாக்குகளில் வடிகாலில் அடைப்பு அதிகரித்துள்ளது மற்றும் பூ சந்தையின் உட்புறத்தில் பழைய வடிகால்களை தூய்மைப்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதிக அழுத்தத்தில் இயங்கும் ஜெட் ரோடிங் இயந்திரங்களை கொண்டு, பூ சந்தையில் உள்ள வடிகால்களை சுத்தப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இடநெருக்கடி காரணமாக ஆட்களை கொண்டு அங்கு பணிகளை மேற்கொள்வது சிரமம் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றன. இதற்கான உபகரணங்களை சென்னை மெட்ரோ வாட்டார் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியிடம் இருந்து CMDA பெற உள்ளதாம்.

இதையும் படியுங்கள்:Jio IPO: இந்திய சந்தையில் புது வரலாறு..! ஜியோ ப்ளாட்ஃபார்ம் IPO பங்குகள் - ரூ.7.4 லட்சம் கோடிக்கு ஏலம்

புதிய வடிகால்கள்..!

சந்தையின் சில பகுதிகளுக்கு புதிய வடிகால்கள் தேவைப்படுவதாகவும், மழைக்காலம் முடிவுற்ற பிறகு அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைக்கு தேங்கும் மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் சந்தை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. தண்ணீர் தேங்கக் கூடிய இடங்களில் பம்புகளை நிறுவ சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் உதவி கோரியுள்ளது. மேலும், மெட்ரோ நிறுவனம் மேற்கொண்டுள்ள பணிகளால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில், அதிக சக்தி வாய்ந்த உறிஞ்சு பம்புகளையும் நிறுவவும் அறிவுறுத்தியுள்ளது.

காய்கறி கொள்முதல்..!

இதனிடையே, கோயம்பேடு சந்தையில் விற்பனையாகதாக காய்கறிகளை வியாபாரிகளிடமிருந்து சேகரித்து அல்லது கொள்முதல் செய்து, அம்மா உணவகம், அரசின் காலை & மதிய உணவு திட்டங்களுக்கு பயன்படுத்துவது குறித்தும் சென்னை மாநகராட்சியுடன் சேர்ந்து பணியாற்றுவது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் பரிசீலித்து வருகிறதாம். சந்தை திடக்கழிவுகளை கையாளும் பணிகளை புதிய ஒப்பந்ததாரர் தொடங்கியுள்ளார். இந்நிலையில் திறந்தவெளியில் கொட்டப்படும் கழிவுகள் வடிகாலில் விழுந்து, மழைநீர் வடிவதை பெரிய அளவில் பாதிக்கின்றன. எனவே இந்த நடவடிக்கைகளை தடுக்க தீவிரமாக கண்காணித்து, குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அதிகப்படியான அபராதங்கள் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரூ.8.34 கோடி மதிப்பிலான பணிகள்:

8 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டமானது பல்வேறு மேம்பாட்டு பணிகளை உள்ளடக்கியுள்ள்ளது. அதன்படி கேட் 7 தொடங்கி கேட் 14 வரை சிமெண்ட் கான்க்ரீட் சாலை அமைப்பது, சாலைகளை மேம்படுத்துவது, காய்கறி சந்தையில் ட்ரக்குகளுக்கான பகுதியில் மழைநீர் வடிகால்களை புத்துயிரூட்டுவது ஆகியவை அடங்கும். பணிகளை தொடங்கிய 6 மாதங்களில் அவற்றை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 67 ஏக்கர் பரப்பளவிலான சந்தை வளாகத்தை மேம்படுத்துவதற்கான திட்டமானது கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks