Kilambakkam: அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்

Kilambakkam: அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
News Image

Kilambakkam Bus - Train Link: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால், ரயில் நிலையத்திற்கான அணுகல் சென்னை நகர மக்களுக்கு மிகவும் எளிதாக மாறும்.

ரயில் நிலையம் டூ கிளம்பாக்கம் பேருந்து நிலையம் ரயில் பாதை:

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கான புறநகர் ரயில் இணைப்பு திட்டம் மேலும் ஒரு முக்கிய முன்னேற்றத்தை கண்டுள்ளது.  புதிதாகக் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் நடைமேடைகளை, பேருந்து நிலையத்துடன் இணைக்கும் வான்வழி நடைபாதைக்காக, ரயில் தண்டவாளங்களுக்கு மேல் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தாங்கு விட்டங்களை அமைத்துள்ளது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, தண்டவாளப் பகுதியில் 'கிரிடர்' எனப்படும் தாங்கு விட்டங்களை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

விரைவில் முடிவடையும் வான்வழி நடைபாதை:

தாங்கு விட்டங்களுக்கு மேலே சாலை வடிவிலான இரும்பு தகடுகளைப் பொருத்துதல் மற்றும் அவற்றை போல்ட்  மூலம் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிந்ததும், மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி தொடங்கும் என்று அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.  275 மீட்டர் நீளமுள்ள இந்த வான்வழி நடைபாதை, புறநகர் ரயில்கள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கு இடையே பயணிகள் எளிதாகச் செல்லும் வகையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும் பேருந்து நிலையத்தையும் இணைக்கும்.

இதையும் படியுங்கள்: TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பிரச்னை:

சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சுமார் 394 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கட்டி முடிக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து முனையம், கடந்த டிசம்பர் 2023ம் ஆண்டு திறக்கப்பட்டது. ஆனால், நகர மக்கள் அந்த போக்குவரத்து முனையத்தை சென்றடைய போதுமான இணைப்பு வசதிகள் இல்லாமல் போனது மிகப்பெரும் சிக்கலாக உருவெடுத்தது. MTC பேருந்துகள் மட்டுமே அந்த பகுதியை சென்றடைய ஒரே வசதியாக இருந்தது. ஆட்டோ போன்ற தனியார் போக்குவரத்து சேவைகளில் பண்டிகை காலங்களில் மிகப்பெரிய அளவிலான கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளது.ரயிலில் செல்ல விரும்பினால் பெருங்களத்தூர் அல்லது வண்டலூர் பகுதியில் இறங்கி அங்கிருந்து ரயில் நிலையத்திற்கு பேருந்து அல்லது ஆட்டோவில் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் சூழலும் உள்ளது. இதன் விளைவாகவே புறநகர் ரயில்கள் கிளாம்பாக்கத்தில் நின்று செல்ல ஏதுவாக ரயில் நிலையமும், அதனை பேருந்து நிலையத்துடன் இணைக்கும் வான்வழிப்பாதையும் திட்டமிடப்பட்டது.

தாமதமாகும் ரயில் நிலைய பணிகள்

சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தால்  முன்மொழியப்பட்டு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் நிதியுதவி அளிக்கப்பட்ட ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட முழுமையடைந்துவிட்டன.  ஆனால் ரயில் நிலையத்திலுள்ள வான்வழிப் பாதையின் கழிவறைகள் மற்றும் மின்தூக்கிகளை பராமரிப்பது யார் என்பது குறித்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட நிர்வாகத்திற்கு இடையிலான இழுபறி நிலையால், வான்வழி பாதைக்கான தாங்கிகளை பொருத்தும் பணி தாமதமானது. இது குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படாத நிலையில்,  CMDA செலவிட்ட சுமார் ரூ.26 கோடி மதிப்பிலான (நிலையத்திற்கு ரூ.20 கோடி மற்றும் வான்வழிப் பாதைக்கு ரூ.6 கோடி) இந்த முழு கட்டமைப்பையும் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகத்திற்கு மாநில அரசு தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதேநேரம், சென்னை ரயில்வே கோட்ட மேலாளரின் தலையீட்டைத் தொடர்ந்து, வான்வழிப் பாதைக்கான தாங்கிகளைப் பொருத்த CMDA நிர்வாகத்திற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

வான்வழிப்பாதை கட்டுமான பணிகள் எப்போது முடிவடையும்?

க்ராண்ட் சதர்ன் ட்ரங்க் (GST) சாலையின் ஒரு பகுதிக்குக் குறுக்கே அமையும் வான்வழிப் பாதையின் மீதமுள்ள பகுதி இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. GST சாலையின் மறுபுறத்தில் உள்ள சில குறைபாடுகளைச் சரிசெய்து வரும் IIT மெட்ராஸ் நிபுணர் குழுவின் ஒப்புதலுக்காக CMDA காத்திருப்பதே இதற்குக் காரணமாம். இருப்பினும் அடுத்த இரண்டு வாரங்களில் இந்த பணி தொடங்கக் கூடும் என அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. போதுமான இணைப்பு வசதிகள் இல்லாததால் கிளாம்பாக்கம் செல்ல வேண்டிய பயணிகள், இந்த தீபாவளிக்குள் ரயில் சேவை கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், வான்வழிப்பாதை பணிகள் நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், வரும் பொங்கலுக்கு தான் இது பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது. இது பொதுமக்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks