Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்

Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
News Image

Kerala Mini Cooper Accident:  கேரளாவில் காரை கொண்டு 3 பேரை இடித்து கொன்ற இளைஞர், இந்த விவகாரத்தை எனது அப்பா பார்த்துக்கொள்வார்” என வசனம் பேசியது நெட்டிசன்களை கொதிப்படைய செய்துள்ளது.

3 பேர் கார் மோதி பலி:

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கொச்சி விமான நிலையம் அருகே அதிகாலையில், மிகவும் வேகமாக சென்ற கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த விபத்தை ஏற்படுத்திய நபர் 19 வயதே ஆன சுஹைல் சஜீவ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்து நேர்ந்த போது அந்த நபர் போதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரத்தை எனது அப்பா பார்த்துக் கொள்வார் என அந்த இளைஞர் பேசியதாக கூறப்படும் தகவல் நெட்டிசன்களை கொதிப்படைய செய்துள்ளது. இத்தகைய நபர் சட்டத்தின் முன் நிறுத்தி காவல்துறை நிச்சயம் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மினி கூப்பரால் நேர்ந்த பயங்கர விபத்து

நெடும்பசேரி எனும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரே நிறுவனத்தில் பணி புரியும் மூன்று பேரும் அருகில் உள்ள தேநீர் கடைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர். கொச்சி விமான நிலையத்தை நோக்கி செல்லும் சாலையில் அவர்கள் பயணித்து கொண்டிருந்த போது, பின்னே அதிவேகமாக வந்த மினி கூப்பர் காரானது கண்னிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் 3 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயமடைந்துள்ளனர். அதோடு காருக்கு அடியில் சிக்கிய ஸ்கூட்டர் 100 மீட்டர் தூரம் வரையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

CCTV captures the moment when a speeding Mini Cooper killed three youths near Nedumbassery airport in Ernakulam. Accused driver Suhail Sajeev, 19, is in custody. Police are verifying the claim that he was driving at 218 kmph and examining forensic and technical evidence. #Kerala #RoadSafety
— Ashish (@KP_Aashish) October 12, 2026

3 பேர் மரணம் - ”அப்பா பார்த்துக்கொள்வார்”

விபத்தில் படுகாயமடைந்த வயநாட்டைச் சேர்ந்த 21 வயதான தேவிகா, பாலக்காட்டைச் சேர்ந்த 22 வயதான கோபிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த 21 வயதான் இஜாஸ் அக்கம்பக்கத்தினரால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அவரும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனிடையே காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விபத்து ஏற்படுத்திய சுஹைல், சற்றும் மனிதாபிமானமோ அல்லது வருத்தமோ இன்றி சாலைகள் என்பது வாகனங்களை ஓட்டத்தானே? இந்த விவகாரத்தை எனது அப்பா பார்த்துக்கொள்வார்? என பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து நேரத்தில் அந்த கார் மணிக்கு சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.

மதுபோதையால் நேர்ந்த விபத்து:

விபத்துக்கு முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பல மதுக்கூடங்களில் மது அருந்தியிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. கேரளாவில் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது 23 என்பதால், 19 வயது இளைஞருக்கு மதுபானம் வழங்குவது சட்டவிரோதமாகும். விபத்துக்கு முன்னதாக 19 வயது இளைஞருக்கு மதுபானம் வழங்கியதாகக் கூறப்படும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்க கேரள கலால் துறை அமைச்சர் எம். லிஜு உத்தரவிட்டுள்ளார். சுஹைல் வெறும் மதுபானம் மட்டுமே அருந்தினாரா? அல்லது தீவிரமான போதைப்பொருள் எதையேனும் பயன்படுத்தியுள்ளாரா? என்பதை அறிய ரத்த மாதிரிகள் உள்ளிட்டவையும் சேகரிக்கப்பட்டுள்ளன.

சரமாரி தாக்குதல்:

இதனிடையே, சுஹைலை மருத்துவப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, உயிரிழந்த நபர்களின் நண்பர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks