Karthik Sabesh Passed Away: தேவா மறைந்து சில நாட்களே ஆன நிலையில், அவரது வீட்டில் மற்றுமொரு துக்க சம்பவம் அரங்கேறி இருப்பது குடும்பத்தினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கார்த்திக் சபேஷ் திடீர் மரணம்:

மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் -(முரளி) மகன் நடிகர் கார்த்திக் சபேஷ் காலமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 37 வயதான அவர் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இவர் வல்லவன், பட்டத்து யானை, குளிர் 100 மற்றும் காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிககளால் அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கார்த்திக் சபேஷ் குடும்பம்:

ரம்யா என்பவரை திருமணம் செய்த இவருக்கு பிரிஷானிதாரா, ஹைரானிதாரா எனும் இரண்டு மகள்கள் உள்ளனர். கீதா சபேஷ் மற்றும் அர்ச்சனா சபேஷ் எனும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர். கார்த்திக் சபேஷின் இறுதிச்சடங்குகள் வளசரவாக்கம் மயானத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. இவரது தந்தையும் பிரபல இசையமைப்பாளருமான சபேஷ் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதியில், தனது 68வது வயதில் காலமானது குறிப்பிடத்தக்கது.

தேவா வீட்டில் சோகம்:

பிரபல இசையமைப்பாளரான தேவா கடந்த சனிக்கிழமை அன்று உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். இது திரையுலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தான் தேவாவின் இளைய சகோதரகளில் ஒருவரான சபேஷின் மகன் கார்த்திக் இன்று உயிரிழந்துள்ளார். தேவாவின் வீட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த துக்க சம்பவங்கள் அந்த குடும்பத்தை மிகவும் சோகத்தி ஆழ்த்தியுள்ளன. இந்த துயரத்திலிருந்து மீண்டும் எல்லாம் வல்ல இறைவன் உறுதுணையாக இருக்க வேண்டும் என திரைதுறையினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Source: Read Full Article