Karthigai Deepam: தாலி கட்டிய தினேஷ்.. துப்பாக்கியைத் தூக்கிய சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் ஷாக்

Karthigai Deepam: தாலி கட்டிய தினேஷ்.. துப்பாக்கியைத் தூக்கிய சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் ஷாக்
News Image

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம்.

தாலி கட்டிய தினேஷ்:

கார்த்திக்கும் ரேவதியும் கல்யாண மண்டபத்துக்குள் வந்து பார்க்கும்போது, சுவாதியின் கழுத்தில் தினேஷ் தாலி கட்டிக்கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த கார்த்திக் அதிர்ச்சியடைகிறார். ஏற்கனவே பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தினேஷ் தாலி கட்டிவிட்டதால் அடுத்து என்ன நடக்குமோ என்று குழம்புகிறார்.

கைதான முத்துவேல்:

இதற்கிடையில், சிவனாண்டியும் முத்துவேலும் பேசிக்கொண்டிருக்கும்போது சந்திரகலா போன் செய்கிறார். திட்டமிட்டபடி கல்யாணம் முடிந்துவிட்டதாக அவர் சொல்ல, இருவரும் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், அடுத்த நிமிடமே அங்கு வரும் போலீஸ், கற்பகத்தைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் முத்துவேலை கைது செய்கிறது. இதனால் சிவனாண்டியும் அதிர்ச்சியடைகிறார்.

உண்மையில் நடந்தது என்ன?

மறுபக்கம், கல்யாண மண்டபத்துக்கு ஆவேசமாக வரும் மயில்வாகனம், தினேஷைப் பார்த்து, “ஏண்டா, நீயே தாலி கட்டிட்டியா?” என்று கேட்டு அவரை அடிக்கப் போகிறார். அப்போதுதான் அங்கு இருப்பது உண்மையான தினேஷ் என்பது தெரியவருகிறது.

இதற்குப் பின்னால் நடந்த விஷயங்களும் தெரியவருகின்றன. காணாமல் போன நகையைத் தேடி வீட்டுக்குச் சென்ற சாமூண்டீஸ்வரி, அங்கே அடியாட்கள் தினேஷைக் கடத்தி அடைத்து வைத்திருப்பதைப் பார்க்கிறார். உடனே துப்பாக்கியைக் காட்டி அவர்களை மிரட்டி, தினேஷை மீட்கிறார். அதன்பிறகு அவரைச் சரியான நேரத்தில் கல்யாண மண்டபத்துக்கும் அழைத்து வருகிறார். இதனால் சாமூண்டீஸ்வரியின் துணிச்சல் அனைவருக்கும் தெரியவருகிறது.

மாயாவிற்கு எதிராக துப்பாக்கி நீட்டிய சாமுண்டீஸ்வரி:

இந்தப் பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் காரணம் யார் என்று கேள்வி எழும்போது, ரேவதி சந்திரகலாதான் இதற்குக் காரணம் என்று நேரடியாகச் சொல்கிறார். ஆனால் சந்திரகலா அதை மறுக்க முயற்சி செய்கிறார்.

மேலும், “அவள் மாயான்னு எனக்குத் தெரியாது. லண்டனில் படித்த பெண் என்றுதான் நினைத்து நம்பினேன். நான் உங்களுக்குத் துரோகம் செய்ய மாட்டேன்” என்று சொல்லி சமாளிக்கப் பார்க்கிறார்.

அந்த நேரத்தில் மாயா அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். இதைப் பார்த்த சாமூண்டீஸ்வரி கோபத்தில் துப்பாக்கியை எடுத்து மாயாவை நேராகக் குறிவைக்கிறார். இதைப் பார்த்து அங்கிருப்பவர்கள் அதிர்ச்சியடைகிறார்கள்.

இப்போது மாயாவின் நிலை என்ன? சாமூண்டீஸ்வரி அவளைச் சுடுவாரா? சந்திரகலாவின் அடுத்த திட்டம் என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை தெரிந்துகொள்ள, ‘கார்த்திகை தீபம்’ சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்!

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks