இந்தியாவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்று ஐபிஎல். கடந்த 19 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. ஐபிஎல் காரணமாகவே இந்தியாவில் டி20 கிரிக்கெட் மேலும் பிரபலமாகிவிட்டது.

மினி ஏலம்:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்க ஒவ்வொரு ஆண்டும் தற்போது மினி ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 16ம் தேதி இந்த மினி ஏலம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்படும் வீரர்கள் பட்டியலை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளனர். மேலும், இந்த மினி ஏலத்தில் தங்கள் அணியை பலப்படுத்தும் வகையில் ஒவ்வொரு அணியும் வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

யார்? யார்? எங்கே?

நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணியில் இருந்து யாரை விடுவிக்க உள்ளனர்? மினி ஏலத்தில் யாரை எடுக்க உள்ளனர்? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும், கடந்த சில சீசன்களாக மோசமாகவே ஆடி வரும் முன்னாள் சாம்பியன்களான சென்னை மற்றும் மும்பை அணிகளும் என்ன செய்யப்போகிறார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுமட்டுமின்றி கோப்பைக்காக மல்லுகட்டும் மற்ற அணிகளும் தங்கள் அணியை வலுப்படுத்த தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த மினி ஏலத்தில் பல்வேறு புதிய வீரர்களும் ஒவ்வொரு அணிக்கும் ஏலத்திற்கு வருவார்கள் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் மிகப்பெரிய தொகைக்கு ஏலத்திற்கு போவார் என்று கருதப்படுகிறது.

மீண்டும் கேப்டன் ஆகிறாரா ரோகித்?

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஹர்திக் பாண்ட்யா வேறு அணிக்கு செல்ல உள்ளதாக வும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், பல அணிகளும் ட்ரேடிங் முறையில் வீரர்களை மாற்றிக் கொள்ளும் பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

சன்ரைசர்ஸ் அணி மீண்டும் தங்கள் அணிக்கு நடராஜனை வாங்கிக் கொண்டுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா ஆர்சிபி அணிக்கு ட்ரேட் செய்யப்பட உள்ளதாகவும், அவருக்கு பதிலாக சால்ட் சன்ரைசர்ஸ் அணிக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுபோன்று பல வீரர்கள் அணி மாற உள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வரும் சூழலில், ஐபிஎல் மினி ஏலத்திற்காக ரசிகர்கள் காத்துள்ளனர்.

Source: Read Full Article