IND vs WI: ரோகித் பவர் ஹிட்டிங்.. கே.எல்.ராகுல் காட்டடி..! 352 ரன்களை எட்டுமா வெஸ்ட் இண்டீஸ்?

IND vs WI: ரோகித் பவர் ஹிட்டிங்.. கே.எல்.ராகுல் காட்டடி..! 352 ரன்களை எட்டுமா வெஸ்ட் இண்டீஸ்?
News Image

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி இன்று சண்டிகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

சுப்மன் 1, விராட் கோலி 0:

முதல் இரு போட்டியில் சதமும், இரட்டை சதமும் விளாசிய சுப்மன்கில் இந்த போட்டியில் 1 ரன்னில் அவுட்டானார். இவர் ஆட்டமிழந்த அடுத்த பந்திலே விராட் கோலி கோல்டன் டக் அவுட்டானார். 4 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்காக ரோகித் - ருதுராஜ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினர். ரோகித் சர்மா பவுண்டரியும், சிக்ஸரும் விளாசி ஆட்டத்தில் அனல் பறக்கச் செய்தார்.

ஹிட்மேன் மிரட்டல்:

அபாரமாக ஆடிய ரோகித், ருதுராஜ் இருவரும் அரைசதம் விளாச சதத்தை ரோகித் சர்மா 92 ரன்னில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் ருதுராஜ் 57 ரன்களில் அவுட்டாக 160 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இந்த தொடரில் முதன்முறையாக பேட் செய்ய வாய்ப்பு கிடைத்த கே.எல்.ராகுல் களமிறங்கியது முதலே அதிரடியாக ஆடினார்.

காட்டடி அடித்த கே.எல்.ராகுல்:

மறுமுனையில் நமன் தீர் அவருக்கு அதிரடி ஒத்துழைப்பு அளித்தார். அவர் 21 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனாலும், அபாரமாக ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் விளாசி தனது அதிரடியைத் தொடர்ந்தார். நிதிஷ் ரெட்டி 9 ரன்னில் அவுட்டானாலும் அன்சுல் கம்போஜ் கே.எல்.ராகுலுக்கு ஒத்துழைப்பு அளித்தார். அன்சுல் கம்போஜும் 17 ரன்களில் அவுட்டான பிறகு மொத்த ஆட்டத்தையும் கே.எல்.ராகுல் கையில் எடுத்தார்.

சீல்ஸ், அல்சாரி ஜோசப், கீமோபால், விடெல் லாஸ் ஆகியோரது பந்துவீச்சை கே.எல்.ராகுல் விளாசினார். அபாரமாக ஆடிய அவர் சதம் விளாசினார். விக்கெட்டுகள் ஒரு முனையில் விழுந்தாலும் கே.எல்.ராகுல் அதிரடியால் இந்தியா மிக எளிதாக 300 ரன்களை கடந்தது. இந்திய அணி இறுதியாக 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்களை எடுத்தது. கே.எல்.ராகுல் கடைசி வரை அவுட்டாகாமல் 87 பந்துகளில் 10 பவுண்டரி 6 சிக்ஸருடன் 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ப்ரார் 8 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

46வது ஓவரில் இந்திய அணி 290 ரன்கள் இருந்தபோது களமிறங்கிய ப்ரார் 8 ரன்கள் மட்டுமே எடுக்க, எஞ்சிய 4 ஓவர்களில் கே.எல்.ராகுல் மட்டும் 40 ரன்கள் வரை எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தற்போது 352 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கி ஆடி வருகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks