IND vs WI: ஃபயர் காட்டிய ஸ்ரேயாஸ்.. சாத்து சாத்து சாத்திய சாம்சன்.. 250 ரன்கள் டார்கெட்!

IND vs WI: ஃபயர் காட்டிய ஸ்ரேயாஸ்.. சாத்து சாத்து சாத்திய சாம்சன்.. 250 ரன்கள் டார்கெட்!
News Image

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2வது டி20 போட்டி இன்று நடந்து வருகிறது. ராஞ்சி மைதானத்தில் நடந்து வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

சாம்சன் அதிரடி:

இதையடுத்து, ஆட்டத்தை அபிஷேக் சர்மா - சாம்சன் தொடங்கினர். களமிறங்கியது முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். பவுண்டரியும், சிக்ஸரும் விளாசிய அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 20 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த இஷான் கிஷன் - சாம்சன் ஜோடி அதிரடியாக ஆடியது.

இருவரும் சிக்ஸரும், பவுண்டரியும் விளாசினர். இதனால், இந்திய ஸ்கோர் மளமளவென ஏறியது. சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் அரைசதத்தை நெருங்கிய நிலையில் அவுட்டானார். அவர் 22 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அதேசமயம் மறுமுனையில் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்த சாம்சன் சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்.

மிஸ்ஸான சதம்:

அடுத்து வந்த ஷிவம் துபே தடுமாறினார். அவர் 7 ரன்னில் அவுட்டாக சதத்தை நோக்கி முன்னேறிய சாம்சன் அவுட்டானார். 41 பந்துகளில் 9 பவுண்டரி  4 சிக்ஸருடன் 82 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில் ஸ்ரேயாஸ் - திலக் வர்மா ஜோடி சேர்ந்தனர்.

15வது ஓவருக்கு பிறகு சேர்ந்த இந்த ஜோடி பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசியது. இதனால், இந்தியாவின் ஸ்கோர் மீண்டும் ஜெட் வேகத்தில் ஏறியது. 200 ரன்களை கடந்த இந்தியாவின் ரன் இவர்களின் பேட்டிங்கால் மேலும் எகிறியது.

250 ரன்கள் டார்கெட்:

இவர்களை கட்டுப்படுத்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாச அதே ஓவரில் 18 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 18 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 250 ரன்கள் இலக்குடன் களமிறங்கியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks