IND vs NZ: இறுதிவரை திக்.. திக்..! வெற்றித் திலகம் வைத்த திலக் வர்மா! போராடி தோற்ற நியூசி!

IND vs NZ: இறுதிவரை திக்.. திக்..! வெற்றித் திலகம் வைத்த திலக் வர்மா! போராடி தோற்ற நியூசி!
News Image

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளும் மோதிய 2வது டி20 போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்தது.

181 ரன்கள் டார்கெட்:

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு டிம் செய்ஃபெர்ட, ஃபின் ஆலன், மிட்செல் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில் பிலிப்ஸ் - ஜேக்கப்ஸ் அபாரமாக ஆடினர். பிலிப்ஸ 70 ரன்களும், ஜேக்கப்ஸ் 58 ரன்களும் எடுக்க நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு 181 ரன்கள் எடுத்தது.

பறிபோன டாப் ஆர்டர்:

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு நியூசிலாந்து அணி சவால் அளிக்கும் விதமாக பந்துவீசியது. கடந்த போட்டியில் அதிரடி காட்டிய சாம்சன் - அபிஷேக் சர்மா அதிரடி காட்ட முடியாமல் தடுமாறினர். சாம்சன் 17 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 14 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த தொடரில் முதன்முறையாக வாய்ப்பு கிடைத்த சூர்யவன்ஷி 4 ரன்களில் அவுட்டாகினார்.

மறுமுனையில் அதிரடி காட்ட முயற்சித்த அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களுக்கும், அக்ஷர் படேல் 11 ரன்களுக்கும் அவுட்டாக இந்தியா 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

வெற்றித் திலகம் வைத்த திலக் வர்மா:

கடந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த நமன்தீர் இந்த போட்டியிலும் அதிரடி காட்டினார். நெருக்கடியான சூழலில் களமிறங்கிய அவர் சிக்ஸராக விளாச இந்தியா சற்று நம்பிக்கை பெற்றது. சிறப்பாக ஆடிய அவர் 17 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 31 ரன்கள் விளாசினார்.

14.5 ஓவரில் 114 ரன்கள் இருந்தபோது திலக் வர்மா - நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தனர். கடந்த சில போட்டிகளாக பெரியளவில் ஜொலிக்காத திலக் வர்மா இந்த போட்டியில் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். தொடக்கத்தில் இவர் நிதானமாக ஆட பின்னர் அதிரடியைக் காட்டினார். பவுண்டரிகளாக அவர் விளாச இந்தியாவின் ஸ்கோர் மளமளவென எகிறியது.

கடைசி வரை த்ரில்:

24 பந்துகளில் 55 ரன்கள் என்ற நிலையில் இருந்து இந்தியாவை மெல்ல மெல்ல மீட்டெடுத்தார். நிதிஷ் ரெட்டியும் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக பவுண்டரியும், சிக்ஸரும் விளாச இந்தியாவின் ஸ்கோர் விறுவிறுவென எகிறியது. இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

18வது மற்றும் 19வது ஓவரில் மொத்த ஆட்டமும் மாறியது. 18வது ஓவரில் ஜேக்கப் டஃபி வீசிய அந்த ஓவரில் சிக்ஸர், இரண்டு பவுண்டரி வர, 19வது ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 18 ரன்களை இந்தியா விளாசியது. கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், திலக் வர்மா - நிதிஷ் ஜோடி அபாரமாக ஆடி கடைசி பந்து மீதம் வைத்து இலக்கை எட்டியது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks