IND vs NZ: 226 ரன்கள் டார்கெட் வச்ச நியூசி! கிழித்தெடுத்த பிலிப்ஸ்..! அட்டாக்கிங் மோடில் இந்தியா!

IND vs NZ: 226 ரன்கள் டார்கெட் வச்ச நியூசி! கிழித்தெடுத்த பிலிப்ஸ்..! அட்டாக்கிங் மோடில் இந்தியா!
News Image

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று அந்த நாட்டில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்து வருகிறது.

மிரட்டல் பேட்டிங்:

டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணி அதிரடியாக ஆடியது. மைதானம் பேட்டிங்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கும் இந்த மைதானத்தில் டிம் செய்ஃபெர்ட் - ஃபின் ஆலன் ஜோடியாக ஆட்டத்தை தொடங்கினர்.

இருவரும் அதிரடியாக ஆடினர். சிறப்பாக ஆடிய இந்த ஜோடியை மயங்க் யாதவ் பிரித்தார். அபாரமாக ஆடிய டிம் செஃபெர்ட் 17 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டேரில் மிட்செல் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க ஃபின் ஆலன் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். சிறப்பாக ஆடிய ஃபின் ஆலன் 24 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

கிழித்தெடுத்த கிளென் பிலிப்ஸ்:

டேரில் மிட்செல் 28 ரன்களில் அவுட்டாக மறுமுனையில் கிளென் பிலிப்ஸ் பட்டாசாய் வெடித்தார். அவர் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். அவரை கட்டுப்படுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டனர். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த பீவோன் ஜேக்கப்ஸ்  சிக்ஸராக விளாசினார்.

புவனேஷ்வர், அர்ஷ்தீப், மயங்க், அக்ஷர் படேல், நிதிஷ் ரெட்டி என யார் வீசினாலும் இந்த ஜோடி விளாசியது. அபாரமாக ஆடிய பீவோன் ஜேக்கப்ஸ் 16 பந்துகளில் 3 சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். சிறப்பாக ஆடிய கிளென் பிலிப்ஸ் அபாரமாக ஆடி அரைசதத்தை கடந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. பிலிப்ஸ் கடைசி வரை அவுட்டாகாமல் அவர் 40 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

226 ரன்கள் டார்கெட்:

226 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள இந்திய அணிக்கு சாம்சன் - அபிஷேக் சர்மா அபாரமாக ஆடினர். சாம்சன் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசி நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்து வருகிறார். மறுமுனையில் அபிஷேக் சர்மாவும் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். இ்ந்த ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கிறது.

சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். சாம்சன் தனது அதிரடியான பேட்டிங்கைத் தொடரும் நிலையில் இந்திய அணி 8 ஓவர்களில் 112 ரன்களை கடந்துள்ளது. இந்திய அணியில் இஷான் கிஷன், ஸ்ரேயாஸ், நிதிஷ், நமன் தீர், அக்ஷர் படேல் வெளியில் இருப்பதால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks