Hope உடன் ஆடும் ஹோப்... சதம் விளாசி சேசிங்கில் துரத்தல்! 352 ரன்களை அடிச்சுடுவாங்களோ?

Hope உடன் ஆடும் ஹோப்... சதம் விளாசி சேசிங்கில் துரத்தல்! 352 ரன்களை அடிச்சுடுவாங்களோ?
News Image

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சண்டிகரில் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற ஆர்வத்துடன் களமிறங்கி ஆடி வருகிறது.

352 ரன்கள் டார்கெட்:

முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு சுப்மன்கில், விராட் கோலி கை கொடுக்காவிட்டாலும் ரோகித் சர்மா, ருதுராஜின் அபார அரைசதத்துடன், கே.எல்.ராகுலின் அதிரடி சதத்தால் 352 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த தொடரில் இரு அணியின் பந்துவீச்சும் மிகவும் மட்டமாகவே இருந்து வந்த நிலையில், இந்த மைதானத்தில் அனுபவ வீரர் சிராஜ், அறிமுக வீரர் அன்சுல் கம்போஜுடன் இந்தியா களமிறங்கியது.

மிரட்டி ஹோப் - ஜாங்கோ:

கடந்த போட்டியில் சதம் விளாசிய கேம்ப்பாலை 10 ரன்னில் சிராஜ் போல்டாக்கினாலும், அடுத்து வந்த ஷாய் ஹோப் - ஜாங்கோ இந்திய பந்துவீச்சை சிதைத்தது. இருவரும் பவுண்டரிகளாக விளாசினர். இமாலய இலக்கு என்பதாலும் சிராஜ் தவிர வேகத்தில் வேறு யாரும் சிரமம் அளிக்காததாலும் இருவரும் ரன்மழை பொழிந்தனர்.

ஆட்டத்தை மாற்றிய ரன் அவுட்:

அன்சுல் கம்போஜ், குர்னூர் ப்ரார் பந்துகளில் பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் இருவரும் விளாசினர். நிதிஷ் ரெட்டியும் ரன்களை வாரி வழங்கினார். குல்தீப் சுழலில் அவர்களை கட்டுப்படுத்த நமன்தீரும் கை கொடுத்தார். அபாரமாக ஆடிய இந்த ஜோடியை விராட் கோலி தனது துரிதமான ஃபீல்டிங்கால் ரன் அவுட்டாக்கினார். இதனால், ஜாங்கோ 56 பந்துகளில் 5 பவுண்டரி  1 சிக்ஸருடன் 67 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஷாய் ஹோப் சதம்:

ஷாய் ஹோப்பிற்கு ஒத்துழைப்பு அளித்து வந்த ரூதர்ஃபோர்ட் 24 ரன்களில் அவுட்டாக, ஷாய் ஹோப் தனி ஆளாக போராடி வருகிறார். தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. இன்னும் கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ள நிலையில், 19 ஓவர்களில் 141 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் எடுக்க வேண்டும். கீமோபால் - ஷாய் ஹோப்புடன் ஆடி வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கடந்த போட்டியிலும் சதம் விளாசி அசத்திய கேப்டன் ஷாய் ஹோப் இந்த போட்டியிலும் சதம் விளாசி அசத்தினார். அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று முழு மூச்சில் அவர் ஆடி வருகிறார். அவரை அவுட்டாக்க இந்திய பந்துவீச்சாளர்கள் தீவிரமாக பந்துவீசி வருகின்றனர்.

ஆறுதல் வெற்றியா? ஒயிட்வாஷா?

ஆண்ட்ரூ, ஃபோர்ட், ஜோசப், மோதி ஆகியோர் வெளியில் உள்ளனர். சிராஜ், குல்தீப், நமன் தீர் கட்டுப்பாடுடன் வீசி நெருக்கடி அளித்து வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றி பெற வெஸ்ட் இண்டீஸ் முனைப்பு காட்டி வரும் சூழலில், தொடரை முழுமையாக வெல்ல சுப்மன்கில் தீவிரம் காட்டி வருகிறார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks