திருச்சியைச் சேர்ந்த சார்பதிவாளராக இருந்த தங்கவேல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், ஓய்வு சார்பதிவாளர் மற்றும் அவரது மனைவிக்கு திருச்சி நீதிமன்றம் கடந்த 2024ல் சிறைத்தண்டனை விதித்தது. இதில் மூன்றாம் தரப்பினராக எனது சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனது சொத்தை பறிமுதல் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இதுதொடர்பான வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார்.

அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்குகள்

அப்போது ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அரசு ஊழியர்கள் தொடர்த்து பணியில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பல ஆண்டுகளாக பிழைப் பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு குற்றவியல் வழக்கு நிலுவையில் இருப்பது பணி நடவடிக்கைகளை அதற்கு தடையாக அமையாது. அரசு அதிகாரிகளின் ஊழல் வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்படுவது தொடர்பாக விளக்கம் அளிக்க கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி அவர் ஆஜராகி கிரிமினல் வழக்கு நிலுவையில் இருக்கும்போது உரிய அரசு பணியாளர் மீது துறைரீதியான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வழிவகை உள்ளது. அவரது வாதத்தை இந்த நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

எந்த சட்டத்தடையும் இல்லை

குற்றவியல் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டுகள் சம்பந்தப்பட்டிருக்கும்போது, ஒரே நேரத்தில் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எந்த சட்டத்தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. ஒரு கிரிமனல் வழக்கு நிருவையில் இருப்பது மட்டுமே ஒழுங்கு நடவடிக்கையை நிறுத்தி வைப்பதற்கான காரணமாக அமையாது. அரசாங்கத்தின் இத்தகைய அணுகுமுறை நிர்வாகத்தின் நலனுக்கோ அல்லது பொதுச்சேவையில் திறனை மேம்படுத்துவதற்கோ உதவாது. மாறாக இது தவறு செய்த அதிகாரிகள் தங்கள் தவறான நடத்தையின் விளைவுகளிலிருந்து தப்பிக்கவோ அல்லது அவற்றை தாமதப்படுத்தவோ வழிவகுக்கும்.

குற்றப் பின்னணி கொண்ட ஒருவர் அரசுப் பணியில் சேர்வது நிர்வாகத்தின் தூய்மையை பாதிப்பதாகக் கருதப்படும் நிலையில், பணியில் உள்ள அரசு ஊழியர் ஒருவர் குற்றவியல் வழக்கில், குறிப்பாக அலுவல் கடமைகளை நிறைவேற்றும்போது எழும் ஊழல் வழக்கில் குறிப்பாக அலுவல் கடமைகளை நிறைவேற்றும் போது சம்பந்தப்பட்டிருப்பதை எவ்வகையிலும் சாதாரணமாக அணுக முடியாது. சொல்லப்போனால், அத்தகைய நபர் மீது உரிய நேரத்தில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் அவர் தொடர்ந்து பணியில் நீடிப்பது நிர்வாகத்தின் தூய்மை, செயல்பாடு மற்றும் நற்பெயர் ஆகியவற்றின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

6 மாதத்தில் துறைரீதியான விசாரணை

இத்தகைய வழக்குகளை பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்க அனுமதிப்பது, அரசு ஊழியர்களுக்கான நேர்மை மற்றும் நடத்தை நெறி முறைகள் வகுக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைத்துவிடும். நடத்தை விதிகளை மீறும் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது ஊழலுக்கு எதிரான வலுவான செய்தியை அளிப்பதோடு, பிற அதிகாரி களும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும்.

எனவே, அரசு இப்பிரச்சினையில் உரிய முடிவை எடுத்து, அரசுப்பணி விதிகளில் தேவையான திருத்தங்களை கொண்டுவரும் என்று இந்த நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. சம்பந்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள் மனுதாரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கி 6 மாதத்தில் முடிக்க வேண்டும். தவறினால் உரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரித்தார்.

Source: Read Full Article