தங்கத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. குறிப்பாக தமிழக பெண்கள் அதிகளவிலேயே தங்கத்தை ஆர்வத்துடன் வாங்குகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியது. தங்கம் விலை உயர்வுக்கு சர்வதேச பொருளாதார மற்றும் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு காரணம் என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் அக்டோபர் மாதம் தொடங்கியதில் தங்கம் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. இன்று சவரன் எவ்வளவு குறைந்துள்ளது என்பதை பார்க்கலாம்.

இதையும் படிங்க: School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?

நேற்றைய விலை

நேற்று தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.100 குறைந்து ரூ.13,390க்கும், ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,07,120க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்

இந்நிலையில் இன்றைய (அக்டோபர் 22) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,05,880ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,235ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.14,438ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.115,504ஆக விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.1240 குறைந்ததை அடுத்து நகைக்கடைகளில் காலையிலேயே கூட்டம் குவிந்து வருகிறது.

இதையும் படிங்க: Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!

வெள்ளி விலை

கடந்த சில நாட்களாகவே வெள்ளி விலை சரசரவென குறைந்து வருகிறது. அதாவது இன்று வெள்ளி கிராமிற்கு ரூ.5 குறைந்து ரூ.225க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 குறைந்து ரூ.225,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article